விக் மட்டும் இல்லனா அவருக்கு அடையாளமே இல்ல.. பற்ற வைத்த பயில்வான் ரங்கநாதன்
சென்னை: விக் மட்டும் இல்லைனா அந்த நடிகரை அடையாளமே தெரியாது என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். பத்திரிகையாளராக மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபகாலமாக திரைப்படங்களில் தலை காட்டாத அவர் திரை பிரபலங்கள் குறித்து யூட்யூப் சேனல்களில் பேசிவருகிறார்.

சர்ச்சைகளை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்
திரை பிரபலங்கள் குறித்து பேசும் பயில்வான் ரங்கநாதன் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது பல முறை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அவருக்கு எதிராக கடும் கண்டனங்களும் எழுந்துவருகின்றன. இருப்பினும் தான் சொல்வது அனைத்தும் உண்மை என்றே அவர் கூறிவருகிறார். ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவரது அந்தரங்கத்தில் தலையிடுவதை பயில்வான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றே பலரும் கூறிவருகின்றனர்.

கவுண்டமணிக்கு விக் இல்லைனா அவ்வளவுதான்
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி குறித்து பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன் அந்தப் பேட்டியில் பேசிய அவர், "கவுண்டமணி நடிக்க வந்த புதிதிலேயே அவருக்கு தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிட்டது. இதையடுத்து அவர் விக் வைத்துதான் பல படங்களில் நடித்தார்.

கவுண்டமணியை அடையாளம் தெரியாது
ஒருமுறை கவுண்டமணியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அந்தப் படத்தின் ஷூட்டிங் கோபிசெட்டிப்பாளையத்தில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகு சென்னைக்கு செல்ல ஈரோடு ரயில் நிலையத்துக்கு சென்றிருந்தார் கவுண்டமணி. அப்போது நானும் ரயில் நிலையத்திற்கு சென்றேன். ஆனால் அங்கு வந்த கவுண்டமணியை அடையாளம் தெரியவில்லை. ஏனெனில் அவர் அப்போது விக் வைத்திருக்கவில்லை.

கவுண்டமணி அடித்த டைமிங்
ஆனால் என்னை பார்த்துவிட்ட கவுண்டமணி அழைத்து, ஏன் ப்பா விக் வைக்காமல் இருந்தால் ரசிகர்களுக்குத்தான் என்னை அடையாளம் தெரியாது உனக்குமா தெரியாது என கேட்டுவிட்டு சிரித்தார்" என்றார். பயில்வான் ரங்கநாதனின் இந்த பேட்டி தற்போது ட்ரெண்டாகியுள்ளது. அதேசமயம், நடிகர்களுக்கு முடி கொட்டுவதும், விக் வைத்துக்கொள்வது ஒன்றும் குற்றம் கிடையாது. அதனை ஏன் பயில்வான் ரங்கநாதன் மிகப்பெரிய ரகசியத்தை வெளிக்கொண்டு வருவது போல் சொல்கிறார் என ரசிகர்கள் விமர்சிக்கவும் செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications











