பிரேம்ஜியும், இந்துவும் இப்படித்தான் பழக்கமானார்களாம்.. பயில்வான் ரங்கநாதன் சொல்றத பாருங்களேன்
சென்னை: கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜியின் திருமணம் நேற்று முன் தினம் திருத்தணி முருகன் கோயிலில் எளிமையாக நடந்தது. இதில் அவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் கலந்துகொண்டார்கள். அவர் திருமணம் செய்திருக்கும் பெண் சேலத்தை சேர்ந்தவர் என்றும்; வங்கியில் பணியாற்றுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் பிரேம்ஜியும், இந்துவும் எப்படி பழக்கமானார்கள் என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் பிரேம்ஜி அமரன். பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான அவர் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இப்போது இயக்கிவரும் GOAT படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்துவரும் அவர்; அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது விஜய்யுடன் இணைந்து நடிப்பதால் இப்படத்தில் எந்த மாதிரி நடித்திருப்பார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

நோ திருமணம்: பிரேம்ஜிக்கு 45 வயது ஆகிறது. ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். அதுகுறித்து கேட்டால் ஜாலியான பதிலையே சொல்வார். அதேபோல் தான் அணிந்து வந்த டி ஷர்ட்டுகளிலும் பெரும்பாலும் நான் ஒரு முரட்டு சிங்கிள் என்ற வாசகம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். இதனையெல்லாம் பார்த்த ரசிகர்கள்; ஒருவேளை பிரேம்ஜிக்கு திருமணம் மீது சுத்தமாக ஆசை இல்லையோ என்ற கேள்வியை தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுப்பிவந்தனர்.
திருமணம்: சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு சோஷியல் மீடியாவில் ஒரு திருமண பத்திரிகை புகைப்படம் வெளியானது. அதில் பிரேம்ஜியின் பெயர் இடம்பெற்றிருந்தது. அது ஃபேக் என்று முதலில் ரசிகர்கள் கூறினர். ஆனால் பிரேம்ஜிக்கு திருமணம்தான் என்பதை வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் பிரேம்ஜி மட்டுமின்றி அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் திடீரென திருமணமா என்று ஆச்சரியப்படவும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பிளாக முடிந்த திருமணம்: அதன்படி நேற்று முன் தினம் திருத்தணி முருகன் கோயிலில் பிரேம்ஜியின் திருமணம் நடைபெற்றது. அவர் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர் சேலத்தை சேர்ந்தவர் என்றும்; வங்கியில் பணியாற்றுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இத்திருமணத்தில் பிரேம்ஜியின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
பயில்வான் ரங்கநாதன் பேட்டி இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் பேசுகையில், "பிரேம்ஜி அமரனும், இந்துவும் ஃபேஸ்புக் மூலம்தான் பழக்கமானார்கள். இருவரும் முதலில் அதில்தான் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். பிறகு வாட்ஸப்பில் பேசினார்கள். அப்போது இந்துதான் முதன்முதலில் பிரேம்ஜியிடம் காதலை சொன்னார். பிரேம்ஜிக்கு 45 வயது. ஆனால் பிரேம்ஜியின் உடலை பார்க்கையில் அப்படி இல்லை. எனவே இந்துவுக்கு பிடித்துவிட்டது. பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











