சொன்னதைச் செய்யாத இளையராஜா.. முடியலனா எதுக்கு அதைச் சொல்லனும்.. பயில்வான் கிளப்பிய சர்ச்சை!
சென்னை: ஊடகவியலாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் நீண்டகாலமாக இருக்ககூடியவராக உள்ளார். இவர் பல முன்னணி நட்சத்திரங்கள் குறித்து சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவித்து அவ்வப்போது ட்ரெண்டிங்கிலும் இருந்து வருபவராக உள்ளார். குறிப்பாக பல நடிகைகள் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து ஒட்டுமொத்த திரையுலகையுமே திடீரென பகீர் கிளப்புவார். இப்படியான நிலையில் அவர் சமீபத்தில் கலந்து கொண்ட விழாவில் பேசுகையில், இளையராஜா குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற மலைகளின் இளவரசி படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன், அதேவிழாவில் கலந்து கொண்ட இசை அமைப்பாளர் மற்றும் இசை அமைப்பாளர் சங்கத் தலைவர் தீனாவிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

பயில்வான்: அதாவது அந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், அப்போது அங்கிருந்த இசையமைப்பாளர் சங்கத் தலைவர் தீனாவிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அப்போது, இசை அமைப்பாளர் இளையராஜா, இசையமைப்பாளர்கள் சங்கத்திற்கு, தனது சொந்த செலவில் கட்டிடம் கட்டித்தருவதாக கூறினார். ஆனால் அதனை இப்போதுவரை செய்யவில்லை. இளையராஜா போன்றோர் ஒருவிசயத்தைச் சொல்லிவிட்டால் அதனைச் செய்துவிடவேண்டும்.

பெயர் சொல்லும்: இசையமைப்பாளர் இளையராஜா, இசையமைப்பாளர் சங்கத்திற்கு கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்தால், 100 ஆண்டுகளோ 200 ஆண்டுகளோ அந்தக் கட்டிடம் இருக்கும் வரை அவரது பெயரை அந்தக் கட்டிடம் கூறிக்கொண்டு இருக்கும். இசை அமைப்பாளர் இளையராஜாவிடம் பல கோடிகள் உள்ளது. அவர் நினைத்தால் உடனே இந்த கட்டிடத்தினைக் கட்டுவதற்கான முழுத்தொகையையும் கொடுக்க முடியும். ஆனால் அவர் இன்னும் அதனைச் செய்யாமல் உள்ளார்.

பணம்: இரண்டு கச்சேரிகள் நடத்தினால்கூட இளையராஜாவால் சங்க கட்டிடத்தினை கட்டுவதற்கான பணத்தினை திரட்டிவிட முடியும். இந்தக் கட்டிடத்தினை இசை அமைப்பாளர் தீனா, இசையமைப்பாளர் சங்க கட்டிடத்தினை கட்டவேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்" எனக் கூறினார். பயில்வான் ரங்கநாதனின் இந்தப் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் பயில்வான் ரங்கநாதனின் இந்தப் பேச்சுக்கு இளையராஜா தரப்பில் இருந்து என்னமாதிரியான பதில் வரும் என இணையவாசிகள் காத்துக் கொண்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications











