இது பாடி டிமாண்ட் பிரச்சனை.. சிவகார்த்திகேயன் - டி. இமான் விவகாரத்தில் மூக்கை நுழைத்த பயில்வான்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும், ஆனால் அந்த துரோகம் குறித்து வெளிப்படையாக பேசினால் தனது குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கும் என்பதால் வெளியே சொல்ல முடியாது என இசையமைப்பாளர் இமான் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் இது தொடர்பாக பல சினிமா விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ப்ளூ சட்டை மாறன், வலைப்பேச்சு அந்தணன், பிஸ்மி மற்றும் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் திடுக்கிடும் தகவல்களை தடாலடியாக பேசி வருகின்றனர்.

மனைவியை பிரிந்த இமான்: இசையமைப்பாளர் இமான் கடந்த 2021-ல் தனது முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்த நிலையில், அதற்கு காரணமே சிவகார்த்திகேயன் தான் எனப் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பயில்வான் ரங்கநாதன் சிவகார்த்திகேயனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம், சரக்கு அடிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை என்றால் அவர் உத்தமபுத்திரன் என்ன? இது பாடி டிமாண்ட் சம்பந்தப்பட்ட விஷயம் எனக்கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
பயில்வான் ரங்கநாதன் பகீர்: நடிகர் கமல்ஹாசன் வீட்டில் கௌதமி தனது மகளுடன் இருந்தபோது மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற பிரச்சினையை கிளப்பி வெளியே வந்தது போலத்தான் இந்த விவகாரத்திலும் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என பற்ற வைத்துள்ளார்.
மேலும் நடிகர் தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பிரச்சனை வர காரணமே தனுஷின் மனைவி சிவகார்த்திகேயனுக்கு பட வாய்ப்புகளை வழங்கியது தான் என்றும் பல பஞ்சாயத்துக்களை அடுக்கி சிவகார்த்திகேயனுக்கும் டி. இமான் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பை தான் அவர் மன்னிக்க முடியாது துரோகம் என மறைமுகமாக கூறியுள்ளார் என்றார்.

பாடி டிமாண்ட்: இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்துள்ள இசையமைப்பாளர் இமானின் மனைவி மோனிகா தங்களுக்கு விவாகரத்து நடைபெறக் கூடாது என நினைத்த நல்ல மனுஷன் தான் சிவகார்த்திகேயன், அவரைப் பற்றி இப்படி ஒரு அவதூறு பரப்ப இமானுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ என தெரியவில்லை என விளாசி உள்ளார். அதே நேரத்தில் பஞ்சாயத்து பண்ண வந்ததற்காக சிவகார்த்திகேயனை துரோகி என இமான் எப்படி சொல்வார் என்றும் பலரும் அந்த விஷயத்தில் பஞ்சாயத்து பண்ணியிருப்பார்களே அவர்களை எல்லாம் விட்டு விட்டு இவரை மட்டும் குறிப்பிட்டு சொல்வது ஏன் என்றும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

இந்த விவகாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்னமும் எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வரும் நிலையில், பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











