மன்சூர் அலிகானை கார்னர் செய்வது ஏன்? என்னை பற்றி பேச யாருக்கும் யோக்கியதை இல்ல.. விளாசிய பயில்வான்!

சென்னை: மன்சூர் அலிகான் வேடிக்கையாகத்தான் பேசினார், அவரை கார்னர் பண்ண என்ன காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசியது பெரும் புயலை கிளப்பி வருகிறது. பலரும் அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

bayilvan ranganathan supporting mansoor ali khan

இந்நிலையில், இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பயில்வான் ரங்கநாதன்: அதில், மன்சூர் அலிகான் எப்போதும் வேடிக்கையா, கேலியா பேசக்கூடிவர். அப்படி விளையாட்டா பேசித்தான் இந்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் தனது உழைப்பால் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். கேப்டன் பிரபாகரன் படத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்து பாராட்டை பெற்று, அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.

காரணம் என்ன: மேலும், லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் மன்சூர் அலிகான் இந்த படத்தின் ஒரு ரேப் சீன் கூட இல்லை என்று சொன்ன போது, த்ரிஷா, விஜய் சிரித்துக்கொண்டு தானே இருந்தார்கள். ஆனால், பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் இதைத்தானே பேசினார். இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு இவரை கார்னர் செய்ய என்ன காரணம்.

என்ன நியாயம்: நடிகர் சங்கர் மன்சூர் அலிகானிடம் எதைபற்றியும் கேட்காமல் அறிக்கை வெளியிட்டதில் என்ன நியாயம். நடிகைகள் நடிகர் சங்க கூட்டத்திற்கு வருவதில், பட வெளியீட்டு விழாவிற்கு வருவதில்லை இதையெல்லாம் ஏன் என்று கேள்வி கேட்காத நடிகர் சங்கம் இந்த விஷயத்தில் இவ்வளவு ஆர்வமாக இருப்பது ஏன்.

எச்சரிக்கை: தற்போது மன்சூர் அலிகான் சரக்கு என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் மாதம் 24ந் தேதி வெளியாக இருக்கும் நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் இவரை படாதபாடு படுத்துகிறார்கள். மேலும், அந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பயில்வான் ரங்கநாதன், நடிகைகளை பற்றி தப்பா பேசுகிறார் என்று கேட்டு இருக்கிறார்கள். அந்த முட்டாள் பசங்களுக்கு எச்சரிக்கை விடுகிறேன்.

யோக்கியதை இல்லை: நான் எந்த நடிகை நடிகர்களை பற்றி தப்பா சொன்னேன் என்று தைரியம் இருந்தால் பொது விவாதத்திற்கு வந்து பேசு. எந்த சூழ்நிலையிலும் நான் யாரை பற்றியும் அவதூறாகவோ, பொய்யாகவோ பேசியதே இல்லை. என்னை பற்றி பேச யாருக்கும் யோக்கியதை இல்ல என்று பத்திரிக்கையாளர்களை விளாசினார் பயில்வான் ரங்கநாதன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X