Pradeep - பெண்கள் பாதுகாப்பு.. கௌதமி ஏன் கமலை விட்டு பிரிந்தார்.. பிரதீப்புக்கு பயில்வான் ரங்கநாதன் சப்போர்ட்

சென்னை: Pradeep Antony (பிரதீப் ஆண்டனி) பிக்பாஸ் சீசன் 7ல் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதற்கு பயில்வான் ரங்கநாதன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பது பிரதீப் ஆண்டனி. அவர் இருந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா, பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்டோர் கமலிடம் குற்றச்சாட்டு வைத்ததை அடுத்து அவர் வீட்டில் இருக்கலாமா என்பது கூறித்து ஹவுஸ் மேட்ஸ் அனைவரிடமும் கருத்து கேட்டார். அவர்கள் பெரும்பாலானோர் ஒத்துக்கொள்ளாததால் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

Bayilvan Ranganathan Supports to Bigg Boss Pradeep Antony

நியாயமே இல்லை: பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயும், வெளியேயும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. முக்கியமாக நிக்சன் எல்லாம் ஐஷுவிடம் வரம்பு மீற் நடக்கிறார்; அவரும் பெண்களை பற்றி தரக்குறைவாக பேசியிருக்கிறார்; மாயா, பூர்ணிமா ஆகிய இருவரும் எத்தனையோ அடல்ட் காமெடிகளை சொல்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க பிரதீப்பை மட்டும் வெளியேற்றியது நியாயமே இல்லை என்கின்றனர் பலர்.

ஒரு சான்ஸ் ஏன் கொடுக்கல?: பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு ஒருபக்கம் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்; பிரதீப் தரப்பு விளக்கத்தையோ அல்லது பதிலையோ கமல் ஹாசன் கேட்கவே இல்லை. இதெல்லாம் உச்சக்கட்ட அநியாயம் என்றும் ஓபனாகவே பேசிவருகின்றனர். இதனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் தலைப்பு செய்தி பிரதீப் ஆண்டனிதான்.

கூல் பிரதீப்: இப்படி அவருக்கு பக்கபலமாக பலரும் நிற்க, கமல் ஹாசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதீப் ஆண்டனி தன்னுடைய வாழ்த்தோடு, நல்லா இருங்க, தீர விசாரிப்பதே மெய் என்று கூறி கமல் ஹாசனுக்கும் பதிலடி கொடுத்தார். அவரது இந்த ட்வீட் ட்ரெண்டாகி மேற்கொண்டு அவருக்கான ஃபேன்ஸ் பாலோயிங்கை அதிகரித்தது.

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பிரதீப் ஆண்டனி விவகாரம் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசியிருக்கும் வீடியோவில், "தூக்கு தண்டனை கைதியிடம்கூட உன்னுடைய கடைசி ஆசை என்னவென்று கேட்பார்கள். ஆனால் பிரதீப்பிடம் அவரது பதிலையே கமல் ஹாசன் கேட்கவில்லை. இப்படி செய்திருக்கக்கூடாது.

ஆனால் கமல் அப்படிப்பட்ட ஆள் இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவிடமிருந்து வந்ததை அவர் செய்திருப்பார். அதேபோல் பெண்கள் பாதுகாப்பு பிரச்னையை காட்டி பிரதீப்பை வெளியேற்றினார்கள். கமல் ஹாசனிடமிருந்து கௌதமி ஏன் பிரிந்தார். தன்னுடைய மகளின் எதிர்கால நலன் கருதி பிரிகிறேன் என்று சொல்லித்தானே பிரிந்தார். அதை மக்கள் யாராவது தப்பா பேசினோமா" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X