பிரதீப்பை வெளியேற்ற நடந்த சதி.. விஷ கிருமி மாயா.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை: பிரதீப் ஆண்டனியை வெளியேற்றியது பிக் பாஸில் நடந்த மோசடி நாடகம் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனின் டஃப் போட்டியாராளராக கருதப்பட்ட பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது. இணையத்தில் பெரும் புயலை கிளப்பி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 7: இதுகுறித்து, பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசி உள்ளார். அதில், ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஏன் என்றால் அதில் நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டதால், அவர்கள் வீட்டில் எப்படி இருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள அந்த நிகழ்ச்சியை பார்த்தார்கள்.
கமல்ஹாசன்: ஆனால், அப்போது அந்த நிகழ்ச்சிக்கு மவுசு குறைந்து விட்டதால், இப்போது அது சீரியல் போல மாற்றிவிட்டார்கள். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்பெல்லாம் மனதிற்கு சரி என்று எது பட்டதோ அதை பேசுவார். ஆனால், இப்போது பிக் பாஸ் சொல்வதை அப்படியே தொகுப்பாளராக தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுதான் உண்மை: பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சி தொடங்கியதுமே மக்களின் மனதை கவர்ந்து விட்டார். எதார்த்தமான மனிதராக இருந்ததால், அவரை அனைவருக்கும் பிடித்துவிட்டது. அவருக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததால், அவர் விஜய் டிவி சொன்னதை கேட்கவில்லை. யார் கையாவது பிடித்து இழு, யாரையாவது காதலி என்றனர். ஆனால், அவனை அனைத்தையும் செய்ய அவர் மறுத்துவிட்டார் இதுதான் உண்மை.
இது எந்த வகையில் நியாயம்: ஆனால், அவருக்கு எதிராக மாயா, ஜோவிகா, பூர்ணிமா எல்லாம் உரிமைக்குரல் எழுப்பி, அவர் கெட்டவார்த்தையில் பேசுகிறார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி ரெட் கார்டு கொடுத்து அவரை வெளியேற்றி உள்ளனர். இது எந்த வகையில் நியாயம், தூக்கு தண்டனை கைதிக்கு கூட கடைசி நேரத்தில் பேச வாய்ப்பு உண்டு, ஆனால் பிரதீப்புக்கு அது கொடுக்கப்படவில்லை. பிக் பாஸ் மேலிடத்தில் வந்த உத்தரவை கமல் நிறைவேற்றி உள்ளார்.
பாவம் பிரதீப்: பிரதீப் யாரையாவது கையை பிடித்து இழுத்தாரா இல்லை, காதலிக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றினாரா உண்மையிலேயே பிரதீப் ஆண்டனி பாவம், அவர் வெளியேற்றப்பட்டது பிடிக்காததால், சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலர் அவரை கட்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











