வில்லன் டூ காமெடியன்.. ஆனந்தராஜின் உண்மை முகம்.. பயில்வான் ரங்கநாதனின் சீக்ரெட் தகவல்!
சென்னை: தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களின் ஒருவரான நடிகர் ஆனந்தராஜிக்கு என்று ரசிகர்கள் மனதில் என்றும் தனி இடம் உண்டு. ஏராளமான படங்களில் வில்லன் நடிகராக நடித்திருக்கும் இவர் தற்போது நகைச்சுவை நடிகராக மாறி ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. இவர் குறித்து சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் சொல்லும் தகவலை தற்போது பார்க்கலாம்.
வில்லன் நடிகரான ஆனந்த் ராஜ், ஒருவர் வாழும் ஆலயம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து, புலன்விசாரணை, பாலைவனப் பறவைகள், மாநகர காவல், சிம்ம ராசி, சூரிய வம்சம், பாட்டாளி, வானத்தைப்போல, கண்ணுபட போகுதய்யா, பாக்ஷா என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். ரஜினி உடன் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாட்ஷா படத்தில் இவரின் நடிப்பை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

நடிகர் ஆனந்த் ராஜ்: வில்லன் நடிகராக நடித்து வந்த ஆனந்த் தற்போது, குணச்சித்திர வேடங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்து பலருடைய மனதையும் கவர்ந்து வருகிறார். அதிலும் இவர் பேசும் வசனங்கள் மற்றும் உடல் மொழி அசைவுகள் கூட வேற லெவலில் எனலாம். குறிப்பாக நகைச்சுவை நடிகராக இவர், நானும் ரவுடிதான் படத்தில் அலப்பாறை செய்து இருப்பார் அதே போல, ஜாக்பாட் படத்தில் மக்களை எப்படியாவது சிரிக்க வைத்துவிட வேண்டும் என்று, பெண் வேடத்தில் இவர் செய்த அட்டகாசத்தை சொல்லி மாளாது. தற்போது ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் ஆனந்த் ராஜ் குறித்து, பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை தனது வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
தண்ணி அடிக்காத நடிகர்: அதில், ஆனந்த் ராஜ் நடிகர் மட்டுமில்லை, அவர் அரசியல்வாதி ஆவார். செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அதிமுகவில் இருந்தார். அப்போது அவருக்கு ஜெயலலிதா, புதுச்சேரி சட்டமன்றத்தில் போட்டியிட ஒரு தொகுதியை ஒதுக்கினார். ஆனால், அதில் அவர் வெற்றி பெறவில்லை. இது மட்டுமில்லாமல் வில்லன் நடிகர்களில் தண்ணி அடிக்காமல், தம் அடிக்காத ஒரே ஒரு நடிகர் ஆனந்த் ராஜ் தான். வில்லன் நடிகராக மிரட்டி வந்த ஆனந்த் ராஜ், தற்போது நகைச்சுவை நடிகராக மாறி, எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிரட்டி வருகிறார்.
கிசுகிசுவில் சிக்கவில்லை: ஆனந்த் ராஜ் சினிமாவிற்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆனப்போதும் இது வரை அவர் எந்த கிசுகிசுவிலும் சிக்கியது இல்லை. அவர் பற்றி, பத்திரிக்கையிலோ, சமூக வலைத்தளத்திலோ எந்த செய்தியும் இதுவரை வந்தது இல்லை. அதே போல படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் அமைதியாக இருப்பதால் கிசுகிசுவில் இவரது பெயர் வராமல் இருக்கலாம். அதே போல சினிமாவில் நிறைய முடிவுடன் இருக்கும் ஆனந்த் ராஜுக்கு உண்மையில் தலையில் முடியே இல்லை. அவர் சினிமாவிற்கு வந்த போதே தலையில் முடி இல்லாமல் தான் இருந்தார். பின் அனைத்து படத்திலும் விக்கை வைத்துக்கொண்டு நடித்து, இப்படியே ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் ஆனந்த் ராஜ் குறித்து பல தகவல்களை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











