கசமுசா காட்சிக்கு நோ சொன்ன நடிகை.. இயக்குநர் செய்த அட்டகாசம்.. அலசி ஆராய்ந்த பயில்வான்!
சென்னை : இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கேத்ரின் தெரசா, ஒரு படத்தில் இயக்குநர் ஒருவர் விரசமான காட்சி எடுக்க முயன்றார். அந்த காட்சியில் நடிக்க நான் மறுத்துவிட்டேன் என்று கூறியிருந்தார். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் அலசி ஆராய்ந்து செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா? என்னும் வசனத்தை பேசி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதைத்தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு பட வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்த்த இவருக்கு, தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், தெலுங்கில் எப்போதும், கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை கேத்ரின் தெரசா: இந்நிலையில் நடிகை கேத்ரின் குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அதில், நடிகை கேத்ரின் தெரசா, அண்மையில் ஒரு பேட்டியில், இயக்குநர் ஒருவர் என் வயிற்றில் தேன் ஊற்றி மலர்களை கொட்டுவது போல காட்சி எடுப்பதாக சொல்லி இருந்தார். எனக்கு அந்த காட்சி ஆபாசமாக இருந்தது. இதனால், அந்த காட்சியில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று கேத்ரின் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.
அந்த இடத்தில் தேன்: யார் இந்த இயக்குநர் என்று விசாரித்த போது தான் ஆர்யா நடித்த கடம்பன் படத்தில் இயக்குநர் ராகவன் இந்த காட்சியை எடுத்து இருக்கிறார். அந்த படத்தில் அந்த காட்சி இடம் பெற்று இருக்கிறது. ஆனால், அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டேன் என்று கேத்ரின் தெரசா அந்த பேட்டியில் பொய் சொல்லி இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.
இதெல்லாம் ஒரு வேலையா: இதே போலத்தான் விஜயகாந்த் நடித்த சின்னகவுண்டர் படத்தில் சுகன்யாவின் வயிற்றில் பம்பரம் விடும் காட்சி இடம் பெற்று இருந்தது. ஆனால், அந்த காட்சிக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது என்றார். இவரின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது, நீங்க இதைத்தான் ஆராய்ச்சி செய்தீங்களா, இதெல்லாம் ஒரு வேலையா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











