Meena: ரூ.300 கோடி சொத்து வாங்கினாரா மீனா.. பணம் எங்கிருந்து வருகிறது.. பயில்வான் சொன்ன அந்த விஷயம்!
சென்னை: 90 காலகட்டத்தில், முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பின்னால் கதாநாயகியாக மாறி, ரஜினி, கமல், பிரபு, விஜய்காந்த், கார்த்தி, அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். மீனாவின் கணவர் இறந்த பிறகு, மீனா பற்றி பலவிதமான செய்திகள் சோஷியல் மீடியாவில் பரவி வருகின்றன. அந்த வகையில், மீனா 300 கோடி மதிப்புள்ள சொத்தை வாங்கி உள்ளதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், நடிகை மீனா, தற்போது 300 கோடியில் சொத்து வாங்கினார் என்று செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஆனால், உண்மையில் அவர், அப்படி எந்த சொத்தையும் வாங்கவில்லை. இது சில யூடியூபர்ஸ் ஆதாரமே இல்லாமல் பரப்பி வரும் ஒரு தவறான செய்தி. இதேபோலத்தான், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் ஒரு செய்தியை பரப்பி விட்டார்கள். எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடாது. நடிகை மீனா ஒரே ஒரு மகளை வைத்து இருக்கிறார். அவருக்கு எதற்கு இப்போது 300 கோடி ரூபாய் சொத்து. அதுமட்டுமல்லாமல் 300 கோடிக்கு சொத்து வாங்கினால் 150 கோடி வரி கட்ட வேண்டும். அப்படி இருக்கும் போது, மீனா எப்படி சொத்து வாங்குவார். கூறுபவர்கள் ஆயிரம் விஷயத்தை கூறவார்கள். அதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

கோடிக்கணக்கில் சொத்து: நடிகை மீனாவின் கணவர் இறந்த பிறகும், அவர் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. மோகன்லாலுடன் ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். அதன் பிறகு, அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதற்கு காரணம், சித்தி, அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மீனா தயாராக இல்லை. நடித்தால் கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று இருப்பதால் மீனாவிற்கு பட வாய்ப்பு வரவில்லை. அது மட்டுமல்லாமல் மீனா நடித்துதான் காலத்தை போக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவருக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது.
குடும்பமே சினிமா குடும்பம்: நடிகை மீனாவின் குடும்பமே ஒரு சினிமா குடும்பம் தான். அவரது சித்தி, அம்மா சினிமா நடிகை தான். இவர்கள் இருவரும் கர்ணன் படத்தில் ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். அதன் வழியில் தான் நடிகை மீனாவும், குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அவருக்கே ஜோடியாக நடித்தார். ராஜ்கிரண், தனது படத்திற்காக ஒரு சிறுவயது கதாநாயகியை தேடிக்கொண்டு இருந்த போது தான், மீனா அவர் கண்ணில்பட்டார். அந்தபடம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார் என்று பயில்வான் ரங்கநாதன் நடிகை மீனா பற்றி பல விஷயத்தை பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











