48 வயதில் நக்மாவிற்கு வந்த ஆசை? இது தேவையா? வெளுத்துவிட்ட பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நக்மா, தற்போது தனக்கு திருமண ஆசை வந்து இருப்பதாகவும், திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தைகள் என வாழ ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூடிபில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மும்பை மாடல் அழகிகளின் வரவு தமிழ் சினிமாவில் அதிகரித்து இருந்த காலகட்டத்தில் பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு இறக்குமதி ஆனவர் தான் நடிகை நக்மா. இவர் நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

முதல் படத்தின் வெற்றியால் புகழின் உச்சிக்கு சென்ற நக்மா, தமிழ் மட்டுமில்லாமல், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்பூரி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் 12 படங்களில் நடித்த நக்மா அஜித் நடித்த தீனா மற்றும் சிட்டிசன் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்திருந்தார். சிட்டிசன் திரைப்படம் தான் நக்மா தமிழில் நடித்த கடைசி படமாகும்.

நக்மாவிற்கு வந்த ஆசை: இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் நக்மா குறித்து வீடியோ ஒன்றில் பேசி உள்ளார். அதில், நடிகை நக்மாவிற்கு 48 வயதில் திருமண ஆசை வந்துள்ளது. இதைத்தான் நம் பெரியவர்கள் பருவத்தில் பயிர் செய் என்றார்கள். அரசாங்கமே பெண்களுக்கு 21 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால், திருமணம் செய்ய வேண்டிய வயசை எல்லாம் விட்டுவிட்டு இப்போது அவருக்கு திருமண ஆசை வந்து இருக்கு.

சரத்குமாருடன் கிசுகிசு: ஷங்கர் இயக்கத்தில் உருவான காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நக்மா, அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது படமே சூப்பர் ஸ்டாருடன் பாட்சா படத்தில் நடித்தார். இந்த படத்தைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். அப்போது நடிகர் சரத்குமாருடன் லிவ்விங் டூ கெதரில் இருந்ததாகவும், கிரிக்கெட் வீரர் கங்குலி, போஜ்பூரி நடிகர் என பல நடிகர்களுடன் இவர் கிசுகிசுக்கப்பட்டார். படவாய்ப்பு குறைந்ததை அடுத்து கிறிஸ்துவ மத போதகராக வலம் வந்த நக்மா தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.

48 வயது கிழவி: இப்படி சினிமா அரசியல் என வலம் வந்த நக்மாவிற்கு இப்போது 48 வயதாகிறது. இவரது சகோதரிகளான ஜோதிகா, ரோஷினி இருவருமே திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என செட்டிலாகி விட்டார்கள். ஆனால் பாட்டி வயதாகிவிட்ட நக்மாவிற்கு இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார். 48 வயது கிழவியை திருமணம் செய்து கொள்ள தொழிலதிபர்கள் யாரும் முன்வர மாட்டார்கள். முடிஞ்சா திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











