சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: 20க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கே.ஆர். பாலனின் பேத்தி தான் நடிகை சங்கீதா. இசையமைப்பாளர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சங்கீதாவுக்கு அவரது அண்ணன்கள் அதிகளவில் தொல்லை கொடுத்ததாக பயில்வான் ரங்கநாதன் தனது புதிய வீடியோவில் பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Bayilvan Ranganathan talks about Actress Sangeetha s dark side life story

சென்னையில் பிறந்து வளர்ந்த சங்கீதா இளம் வயதிலேயே நாட்டியத்தில் அதிக ஈடுபாடு கொண்டு அதை கற்றுத் தேர்ந்த நிலையில், 1997ம் ஆண்டு கங்கோத்ரி எனும் மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

நடிகை சங்கீதா: அறிமுகமான ஒரே வருடத்தில் மலையாளம், கன்னடா மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் சுமார் 5 படங்கள் அவர் நடித்து வெளியானது. அதற்கு அடுத்த ஆண்டு தமிழில் முரளி, சூர்யா நடிப்பில் வெளியான காதலே நிம்மதி படத்தின் மூலம் அறிமுகமானார். உதவிக்கு வரலாமா, பகவத் சிங், கெஸ்ட் ஹவுஸ், டபுள், கபடி கபடி, பிதாமகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பிதாமகன் படம் சங்கீதாவுக்கு மிகப்பெரிய பாராட்டுக்களையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது.

உயிர் படம் கிளப்பிய சர்ச்சை: இயக்குநர் சாமி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான உயிர் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. அண்ணியை தப்பா காட்டலாமா? என வடிவேலு முதல் பல பிரபலங்கள் கொந்தளித்தனர். அனிமல் படத்துக்கு இப்போ கிடைத்த விமர்சனத்தை விட பல மடங்கு மோசமான விமர்சனம் கிடைத்தது. அந்த படத்தில் சங்கீதா லீடு ரோலில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த தனம் திரைப்படமும் சர்ச்சையை கிளப்பியது.

அண்ணன்களால் தொல்லை: சங்கீதா நடித்து சம்பாதிக்க ஆரம்பித்த நிலையில், அவருடைய இரண்டு அண்ணன்களும் சங்கீதாவின் பணத்தை வாங்கிக் கொண்டு குடித்துக் குடித்தே அவரது வாழ்க்கையை சீரழித்ததாக பயில்வான் ரங்கநாதன் தனது புதிய வீடியோவில் பேசி பகீர் கிளப்பியுள்ளார். சங்கீதாவின் அம்மாவும் தனது மகன்களை கண்டிக்காமல் சங்கீதாவையே கஷ்டப்படுத்தினார் என்றும் கூறியுள்ளார்.

காப்பாற்றிய கிரிஷ்: சங்கீதாவை நரக வாழ்க்கையில் இருந்து காப்பாற்றியதே அவருடைய காதல் கணவர் இசையமைப்பாளர் கிரிஷ் தான் என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். 2009ம் ஆண்டு சங்கீதா மற்றும் கிரிஷ் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. கார், வீடு என தற்போது சொகுசாக தான் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு காரணமே கணவர் கிரிஷ் தான் என்றும் தனது வீட்டிலேயே இருந்திருந்தால் இப்படியொரு சுகமான வாழ்க்கை தனக்கு கிடைத்திருக்காது என சங்கீதாவே கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் கூறியுள்ளார்.

மகேஷ் பாபு, விஜய் படங்களில்: சீனியர் நடிகையாக வலம் வரும் சங்கீதா கிரிஷ் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பணியாற்றி வருகிறார். மகேஷ் பாபு நடித்த சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் நடித்த சங்கீதா கடந்த ஆண்டு விஜய் நடித்த வாரிசு படத்திலும் அண்ணியாக நடித்திருந்தார். அவ்வப்போது கிடைக்கும் பெரிய படங்களில் குணசித்ர வேடங்களை ஏற்று நடித்து வரும் சங்கீதா சூப்பர் ஜோடி ரியாலிட்டி ஷோவில் சினேகாவுடன் இணைந்து நடுவராக அந்த ஷோவை தற்போது நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X