பல நடிகர்கள் ரூட்டு.. எல்லாத்துக்கும் நோ சொன்ன சுவலட்சுமி.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன தகவல்!
சென்னை: கோலி குண்டை உருட்டிவிட்டது போல அழகான கண், பார்த்தவுடன் மனதில் வருடும் முகம் என 90 காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சுவலட்சுமி. இவரை, வளைத்துப்போட பல நடிகர்கள் பிளான் போட்டும் அனைத்துக்கும் நோ சொன்னார் என சினிமா மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் சுவலட்சுமியை புகழ்ந்து பேசி உள்ளார்.
கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட சுவலட்சுமி,1994 ஆம் ஆண்டு உத்தோரன் என்ற பெங்காலி படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில படத்தில் நடித்து வந்த இவர், வசந்த் இயக்கிய ஆசை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். இவர் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்தன.

நடிகை சுவலட்சுமி: ஆசை படத்தைத் தொடர்ந்து இவருக்கு இரண்டாவது வெற்றிப்படமாக அடைந்தது லவ் டுடே . அந்த படத்தில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக நடித்திருந்தார். இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் விஜய்யின் திரைப்பயணத்தில் இப்படம் ஒரு முக்கியமான படமாக மாறியது. இதைத்தொடர்ந்து விஜய், அஜித், பிரபுதேவா, கார்த்திக், சரத்குமார், முரளி என பல முன்னணி நடிகர்களோடு நடித்து சினிமாவிற்கு வந்து குறுகிய காலத்திலேயே பெரிய வளர்ச்சியை தொட்டார். சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த சுவலட்சுமி, 2001ஆம் ஆண்டு விஞ்ஞானியான ஸ்வகாடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டு சுவிட்சர்லாந்தில் செட்டிலானார்.
பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில், சினிமா மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், சுவலட்சுமி பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சினிமாவில் கவர்ச்சியாக நடித்தால் தான், படவாய்ப்பு வரும் என்ற எண்ணத்தை நடிகை சாவித்ரி, தேவிகா, பத்மினி போன்ற நடிகைகள் மாற்றினார்கள். அதேபோல முன்னணி நடிகையான சுவலட்சுமி கனவுக்கன்னியாக இருந்த போதும் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார்.

நடிகை சுவலட்சுமி தமிழில் 13 படங்களில் நடித்துள்ளார். அதில் 7 திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஆகும். நடிகை சுவலட்சுமி பெரும்பாலான படங்களில் சேலை கட்டிக் கொண்டு போர்த்திக்கொண்டுதான் நடித்தார். எத்தனையோ நடிகர்கள் வற்புறுத்தியும் அவர் கவர்ச்சியாக நடிக்கவே இல்லை.
ரூட்டு போட்ட நடிகர்கள்: அதுமட்டுமில்லை, பல நடிகர்கள் சுவலட்சுமிக்கு காதல் வலை வீசிய போதும், தனது முடிவில் உறுதியாக இருந்தார். இவர் கார்த்திக்குடன் கோகுலத்தில் சீதை படத்தில் நடித்த போது, நடிகர் கார்த்திக் அவருக்கு பல ரூட்டு போட்டார். ஆனால் கார்த்திக்கின் காதல் வலையில் சுவலட்சுமி சிக்கவே இல்லை. அதே போல பல நடிகர்கள் காதலிப்பதாக சொல்லியும் எல்லாத்துக்கும் நோ சொல்லி ஒழுக்கமாக இருந்தவர் நடிகை சுவலட்சுமி என்று பயில்வான் ரங்கநாதன் அவரை புகழ்ந்து பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











