ஷீத்தலுடன் உல்லாசமாக இருக்க 1 லட்சம் ரூபாய்.. பப்லு நீ பேசலாமா?.. சண்டை செய்யும் பயில்வான் ரங்கநாதன்

சென்னை: Bayil Ranganathan On Babloo(பப்லு குறித்து பயில்வான் ரங்கநாதன்) பப்லு - ஷீத்தல் உறவு குறித்து பயில்வான் ரங்கநாதன் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

சின்னத்திரையில் பிரபலமான நடிகராக இருக்கும் பப்லு பிருத்விராஜ் சினிமாவிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில்கூட அனிமல் படத்தில் நடித்த அவர் தற்போது மிஷ்கின் இயக்கும் ட்ரெய்ன் படத்திலும் நடிக்கிறார். இவர் முதலில் பீனா என்பவரை திருமணம் செய்துகொண்டு அவரை விவகாரத்து செய்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் இருப்பதும் அந்த மகனுக்கு ஆட்டிஸம் குறைப்பாடு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பப்லு தன் மகன் மீது பாசமாகவே இருக்கிறார்.

Bayilvan Ranganathan Talks about Babloo And Sheethal Relationship

ஷீதலுடன் காதல்: பப்லு பிருத்விராஜுக்கு 57 வயது ஆகிறது. இந்த சூழலில் அவர் தன்னுடன் பல வயது குறைந்த ஷீத்தல் என்பவரை காதலித்து அவருடன் லிவிங் டூ கெதரிலும் இருந்து வந்தார். இருவரும் இணைந்து பேட்டி கொடுப்பது; வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது என இருந்தனர். ஆனால் சமீபத்தில் நடந்த பப்லுவின் பிறந்தநாளில் ஷீத்தலை காண முடியவில்லை.

பிரிவு?: எப்போதும் பப்லுவுடன் இருக்கும் ஷீத்தல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இல்லாததால் இருவரும் பிரிந்துவிட்டார்களோ என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்ப ஆரம்பித்தனர். ஆனால் இரண்டு பேரும் உறுதி செய்யவில்லை. அதேசமயம் பப்லுவோ ஷீத்தல் பற்றி பட்டும் படாமலேயே பேசுகிறார். எனவே கண்டிப்பாக இவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்றே ரசிகர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் இவர்களது பிரிவு குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு பப்லு பதிலடி கொடுத்திருந்தார். தற்போது பயில்வான் ரங்கநாதன் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேசிய பயில்வான் ரங்கநாதன், "பப்லு ஷீத்தல் பிரிவு பற்றி பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால் நான் பேசியதை மட்டும் அவர் குறிப்பிட்டு என்னை திட்டியிருக்கிறார்.

உண்மை சுடத்தான் செய்யும்: 72 வயது ஆகும் என்னை பார்த்து ஒழுங்காக நடக்க தெரியாது என்று சொல்லியிருக்கிறார் அவர். இந்த வயதில் நடப்பதே பெரிய விஷயம். நன்றாக உடற்பயிற்சி செய்துகொண்டு கட்டுமஸ்தான உடலை காண்பித்தால் நீ எல்லாம் பெரிய மனிதன் என்று ஒத்துக்கொள்ள வேண்டுமா. வார்த்தையை அளந்து பேச வேண்டும். இந்த வயதில் பொம்பள சோக்கு வேண்டுமா?

முழுதாக சொல்கிறேன்: இதோ இப்போது உன்னை பற்றி முழுதாக சொல்கிறேன். பப்லு முதலில் பீனா என்பவரை திருமணம் செய்தார். இந்த மனிதருக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும். அதனால் அடிக்கடி பீனாவுடன் சண்டை போட்டார். இதனால் ஏற்பட்டா கருத்து வேறுபாட்டால் இரண்டு பேரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இதுகுறித்து பல செய்திகள் வந்திருக்கின்றன.

முதலாம் சந்திப்பு: ஷீத்தல் என்னை நிகழ்ச்சி ஒன்றில்தான் சந்தித்தார். அப்போது ஷீத்தல் காதலை சொன்னார். அதற்கு முதலில் கூச்சப்பட்ட நான் அதன் பின்னர் அந்தக் காதலை ஏற்றுக்கொண்டேன். அவர் வற்புறுத்திதான் என்னை லிவிங் டு கெதருக்கு ஒத்துக்கொள்ள வைத்ததாக பப்லு தெரிவித்திருக்கிறார்.

ஒருமுறை ஷீத்தால் ஸ்டார் ஹோட்டலில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொன்னவுடனே, அந்த ஹோட்டலுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து இரண்டு பேரும் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள். எல்லா தவறையும் நீ செய்துவிட்டு இப்போது என் மீது கோபப்பட்டால் எப்படி?.. நீ எல்லாம் பேசலாமா?.. தர்மத்தின்படி பார்த்தால் ஒருவன் படக்கூடிய கோபத்தில் நியாயம் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கான பிரதிபலன் கோபப்பட்டவனையே வந்து சேரும். ஆதலால் மேலும் மேலும் பாவத்தை செய்யாதே" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X