விபச்சார வழக்கில் கைதான பூனைக்கண் நடிகை.. இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
சென்னை: பாசமலர் சீரியல் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை புவனேஸ்வரி. அந்த சீரியலைத் தொடர்ந்து, சந்திரலேகா, சித்தி என அடுத்தடுத்து தொடர்களில் நடித்து பிரபலமான புவனேஸ்வரி விபச்சார வழக்கில் சிக்கி வாழ்க்கையை தொலைத்துவிட்டு, கண்ணீருடன் நின்றார். அந்த புவனேஸ்வரி இப்போது என்ன செய்கிறார் என்று வீடியோ ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார்.
சீரியலில் வில்லித்தனமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்த புவனேஸ்வரியை ரசிகர் பூனைக்கண் அழகி என்று செல்லமாக அழைத்து வந்தனர். அந்த அளவிற்கு அழகான இருக்கும் அவரின் கண். இவர் சீரியலில் நடித்து கொண்டு இருக்கும் போதே, ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இரண்டு காட்சியில் மட்டுமே நடித்து இருந்தாலும், அந்த படம் இவருக்கு பெயரை பெற்றுக்கொடுத்தது. இதையடுத்து, பிஸியான நடிகையாக மாறிய புவனேஸ்வரி விபச்சார வழக்கில் சிக்கியதால், அவருக்கு வாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்து போய் சினிமாவில் தலைகாட்டாமலே இருந்தார்.

நடிகை புவனேஸ்வரி: இந்நிலையில் பிஹைன் கோல்டு youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகர் பயில்வான் ரங்கநாதன், புவனேஸ்வரி குறித்து பலருக்கும் தெரியாத பல விஷயத்தை கூறியுள்ளார். அதில், நடிகை புவனேஸ்வரி, டிவி, சினிமா என பலவற்றில் கவர்ச்சி நாயகியாக கொடிகட்டி பறந்தார். ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்திற்கு பிறகு இவரின் புகழ் எங்கேயோ சென்று விட்டது. அந்த நேரத்தில் தான் இவர், மீது விபச்சார வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனால், அந்த வழக்கை தைரியமாக எதிர்த்து தான் விபச்சாரி இல்லை என்பதை போராடி நிரூபித்தவர் தான் புவனேஸ்வரி.
சாப்பாட்டுக்கே கஷ்டம்: யார் அந்த புவனேஸ்வரி தெரியுமா? திருநெல்வேலியை அடுத்த சங்கரன்கோவிலில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில், ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சென்னைக்கு வேலை தேடி வந்தவர் தான் இந்த புவனேஸ்வரி. பின் கடுமையான உழைப்பால் டிவி, சினிமா என பலவற்றில் நடித்து கொடிகட்டி பறந்தார். அப்பேர்ப்பட்ட புவனேஸ்வரி இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? சேதுராமன் தலைமையில் இயங்கிக் கொண்டு இருக்கும், தேவர் பேரவையில் மகளிர் அணி தலைவராக இருக்கிறார். மேலும், சென்னையில் 3, 4 பங்களாக்களை வைத்துக்கொண்டு அதனை சூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டு வருகிறார்.
துறவி வாழ்க்கை: புவனேஸ்வரி தற்போது பழைய வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, இல்லற வாழ்க்கையை துறந்த சாமியாராக வாழ்ந்து வருகிறார்.அதுமட்டும் இல்லாமல், தினந்தோறும் வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் அன்னதானம் செய்து வருகிறார் .இதே போல கோயம்பேட்டில் உள்ள கோவில் ஒன்றிலும் தினமும் அன்னதானம் செய்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் தீபாவளி பண்டிகைக்கு பத்தாயிரம் பேருக்கு இலவச வேட்டி,சேலைகளை வழங்கி வருகிறார்.
சினிமாவில் கோடி கோடியாக சம்பாதித்த நடிகைகளுக்கு கூட இந்த எண்ணம் வராது? ஏன் இந்த எண்ணம் வந்தது என்று அவரிடம் கேட்டபோது நான் சங்கரன்கோவிலில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டேன் தற்போது, நான் வசதியாக இருக்கிறேன். என்னுடைய பணத்தில் இருந்து ஏழைகளுக்கு உதவி செய்கிறேன் என்று கூறியதாக பயில்வான் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











