Bigg Boss 7- பிக்பாஸ் 7.. ரவீனா - மணி.. காதல் கடியா காம கடியா?..பட்டிமன்றம் வைக்க சொல்லும் பயில்வான் ரங்கநாதன்

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் 7ல் மணிசந்திராவை ரவீனா கடித்தது காதல் கடியா காம கடியா என பட்டிமன்றம் வைக்க வேண்டுமென பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

பிக்பாஸ் ஏழாவது சீசன் கடந்த ஞாயிற்றுகிழமை முதல் நடந்துவருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கும் இந்தப் போட்டியை சுவாரசியமாக நகர்த்தி செல்ல புது புது டாஸ்க்குகள், ரூல்ஸுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக எப்போது முதல் வாரம் நாமினேஷன் இல்லாத சூழலில் இந்த சீசனில் இரண்டாவது நாளே நாமினேஷன் பிராசஸ் ஆரம்பித்திருக்கிறது.

Bayilvan Ranganathan Talks about Bigg Boss 7 And Ravenaa, Manichandra

பிக்பாஸ், ஸ்மால் பாஸ்: அதேபோல் இந்த சீசன் இரண்டு வீடுகளில் நடக்கிறது. அதன்படி கேப்டனை கவர தவறிய ஆறு பேர் முதலில் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அதனையடுத்து ரூல்ஸை மீறிய இரண்டு பேர் அனுப்பப்பட மொத்தம் இப்போது ஸ்மால் பாஸ் வீட்டில் எட்டு பேர் இருக்கிறார்கள். அவர்களால் எந்த டாஸ்க்கிலும் பங்கேற்க முடியாது; கிளீனிங், சமையல் ஆகியவற்றை அவர்கள்தான் செய்ய வேண்டும்.

ஆரம்பித்த பஞ்சாயத்து: இந்த சீசனில் பஞ்சாயத்துக்கு பஞ்சம் இருக்காது என்பது சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது. நேற்று கூல் சுரேஷ் - விஷ்ணு - மாயா ஆகிய மூன்று பேருக்கும் முட்டிக்கொண்டது. அதேபோல் கேப்டனுக்கும் பிரதீப்புக்கும் முட்டிக்கொண்டது. மேலும் விசித்திரா உடை குறித்து பேசிய விஷயமும் வீட்டுக்குள் விவாதம் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்த சீசன் அசல் கோலார்: கடந்த சீசனில் அசல் கோலார் வெல்லாவிட்டாலும் ஹாட் டாபிக்காக இருந்தார். ஏனெனில் அவர் பெண்களுடன் கொஞ்சம் ஒட்டியே பழகிக்கொண்டிருந்தார். அதேபோல் இந்த சீசனின் அசல் கோலாராக ரசிகர்கள் மணிசந்திராவை பார்க்கின்றனர். அவரும் ரவீனாவும் ஏற்கனவே பழக்கமானவர்கள். எனவே இவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கையில் கடித்த கடி: அதை உறுதிப்படுத்தும் விதமாக மணிசந்திராவின் கையை ரவீனா கடித்தார். மேலும் தனது லிப்ஸ்டிக்கையும் அவரது கையில் தடம் பதித்தார். ஆனால் ரவீனா விளையாட்டுக்குத்தான் கடித்தார் அதை பலரும் வேறு விதமாக பார்க்கிறார்கள் என்ற கருத்தும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் 7ல் மணிசந்திரா கையை ரவீனா கடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

என்ன பேசினார்: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "ரவீனாவுக்கும் மணிசந்திராவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது. இவர்களுக்குள்ளான கெமிஸ்ட்ரியை இன்னும் சில நாட்களில் சொல்வார்கள். ரவீனா மணிசந்திராவின் கையை கடித்தார். அது காதல் கடியா இல்லை காம கடியா என்பது பற்றி சாலமன் பாப்பையாவை அழைத்து வந்து பட்டிமன்றம் நடத்த வேண்டும். அப்போதான் நல்லா இருக்கும்" என்று ஒரே போடாக போட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X