கர்ப்பிணியை எட்டி உதைத்த பிக்பாஸ் அர்னவ்?.. ஜெயிலுக்கும் போனாரா?.. பரபரப்பு கிளப்பிய பயில்வான்

சென்னை: பயில்வான் ரங்கநாதன் பத்திரிகையாளராகவும், நடிகராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் பேசும் பல விஷயங்கள் திரையுலகிலும் ரசிகர்களிடமும் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடியவை. அவருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் பணி செய்திகள் சொல்வது என்று கூறுவார். இந்தச் சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் போட்டியாளராக உள்ளே சென்றிருக்கும் அர்னவ் குறித்து பயில்வான் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தொடங்கியிருக்கிறது. முதல் நாளே எவிக்ட் ஆகி மீண்டும் வீட்டுக்குள் வந்திருக்கிறார் சாச்சனா. அதேபோல் நேற்று ஃபேட்மேன் ரவீந்தர் எவிக்ட் செய்யப்பட்டார். இந்தமுறை வீட்டுக்குள் வந்திருக்கும் போட்டியாளர்கள் நிறைய கண்டெண்ட்டுகளை கொடுப்பார்கள் என்பது உறுதியாக தெரிவதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள். அதற்கேற்றபடி விஜய் சேதுபதியும் தனது பங்குக்கு போட்டியாளர்களை வைத்து செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

bigg boss arnav bayilvan ranganathan

பயில்வான் ரங்கநாதன்: நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் அர்னவ்வை விஜய் சேதுபதி பங்கம் செய்துவிட்டார். இந்நிலையில் அவர் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். கிங் 24X7 என்ற சேனலுக்கு பேசியிருக்கும் பயில்வான், "பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கியிருக்கிறார் அர்னவ். அவர் பார்ப்பதற்கு அழகாக இருப்பார். டிவி சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோதே திவ்யா என்பவருடன் லிவிங் டூ கெதரில் இருந்தார்.

எட்டி உதைத்த அர்னவ்: பிறகு அவரும் திவ்யாவும் திருமணம் செய்துகொண்டார்கள். அதனையடுத்து திவ்யா கர்ப்பமாக இருக்கும்போது அவரை அர்னவ் காலால் எட்டி உதைத்திருக்கிறார். பிறகு பொறுமையாக இருந்து தனது குழந்தையை பெற்றெடுத்தார் திவ்யா. ஆனால் அர்னவ்வோ வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருந்தார். இதன் காரணமாகத்தான் திவ்யாவை வெறுத்தார். மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் திவ்யா. போலீஸ் அர்னவை கைதும் செய்தது. ஜாமீனில் வெளியே வந்திருக்கும் அவர் இப்போது இன்னொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார். அந்த நடிகையுடனேயே பிக்பாஸ் வீட்டுக்கும் சென்றிருக்கிறார்" என்றார்.

வலுக்கும் கண்டனம்: முன்னதாக பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்திவருபவர். சினிமாவில் நடித்து, பத்திரிகையாளராக இருந்துவருபவர் இப்போது யூட்யூப் தளத்தில் இயங்கிவருகிறார். தான் பேசும் சேனல்கள் அதிக வியூஸ்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக நடிகர்கள், நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை தொடர்ந்து பேசிவருகிறார். அவர் பேசுவது எல்லாம் பச்சை பொய் என்று ஒருதரப்பினர் கூறினாலும்; கடந்த பல வருடங்களாகவே சினிமாவுடன் தொடர்பில் இருப்பதால் தான் பேசுவது உண்மை என்று பயில்வான் சொல்வது வழக்கம்.

பதிலடி: ஆரம்பத்தில் அவரது பேச்சு செலிபிரிட்டிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல அவரது பேச்சில் அநாகரீகம் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தது. நிலைமை இப்படி இருக்க நடிகை ரேகா நாயர் இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்ததை வைத்து பயில்வான் தாறுமாறாக பேச; ரேகாவோ நேரடியாக பயில்வானிடம் மல்லுக்கு போய்விட்டார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி; ரேகா நாயருக்கு பலரும் தங்களது பாராட்டை கொடுத்தனர். அதேபோல் ராஜன், விஷால், பாலா உள்ளிட்டோரும் தங்களது தரமான பதிலடியை கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X