முதலில் அண்ணன் பிறகு அத்தான் .. நடிகைகளின் ஆபாச செயலுக்கு ஆதாரம் இருக்காம்.. ஓவராக பேசும் பிரபலம்
சென்னை: பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா பிரபலங்களை பற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசிவருபவர். அவர் ஒரு வீடியோ வெளியிட்டாலோ அல்லது பேட்டி கொடுத்தாலோ அதில் கண்டிப்பாக சர்ச்சை இருக்கும் என்பது ஃபார்முலாவாகிவிட்டது. பயில்வானுக்கு எதிராக பலரும் கண்டனங்கள் தெரிவித்துவந்தாலும் அவர் எதையும் நிறுத்திக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் நடிகைகள் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய முறையில் அவர் பேசியிருக்கிறார்.
பயில்வான் ரங்கநாதன் பேசினார் என்றால் அது சர்ச்சை என்று பொருள். திரையுலகை சேர்ந்தவர்கள் பற்றி அவர் பேசிவரும் விஷயங்கள் பல நேரங்களில் அருவெருக்கத்தக்க வகையில் இருக்கும். அனைத்தையும் இவர் அருகிலிருந்து பார்த்தது போல்தான் பேசுவார். இதன் காரணமாக அவருக்கு பல முறை கண்டனங்கள் வலுத்திருக்கின்றன. இந்தச் சூழலில் நடிகைகள் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். அவர் ஒரு வீடியோவில், "சினிமாவில் தனி மனித ஒழுக்கம் என்பது 99 விழுக்காடு இல்லை. நான் சொல்லும் அனைத்து விஷயங்களுக்கும் ஆதாரம் இருக்கிறது.

நான் செய்தால் தவறா?: நடிகைகள் வாய்ப்புகளுக்கு சோஷியல் மீடியாவில் ஆபாச புகைப்படங்களை பதிவு செய்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி நான் பேசினால் தவறு என்று சொல்கிறார்கள். சினிமாவில் உள்ள அனைவரையுமா நான் விமர்சிக்கிறேன். தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்களைத்தான் விமர்சிக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் உண்மையோடும் மனசாட்சியோடும் வாழ வேண்டும். நான் யாரைப் பற்றி பேசினாலும் அதற்கான ஆதாரத்தை வைத்துக்கொண்டுதான் பேசுவேன்.
நான் பேசக்கூடாதா?: சினிமாவில் இருந்துகொண்டு நீங்களே இப்படி பேசலாமா என்று கேட்கிறார்கள். சினிமாவில் இருக்கும் நான் குறையை சொல்லக்கூடாதா. ஆபாச படங்களை வெளியிடுவது தவறில்லை. ஆனால் நான் இப்படி பேசுவது மட்டும் தவறா. அண்ணன் என்று சொல்லிவிட்டு இரவில் அத்தான், மாமா என்று கூப்பிடும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இதனை நான் சொல்லவில்லை. மூத்தவர் ஒருவரே சொல்லியிருக்கிறார்.
கம்பரசம் புத்தகம்: பேரறிஞர் அண்ணா கம்பரசம் என்ற புத்தகத்தை எழுதினார். அதில் கம்பராமாயணத்தை குறை சொன்னாரா இல்லை ராமரை குறை சொன்னாரா. ராமாயணத்தில் உள்ள காம விஷயங்களை மட்டும்தான் சொல்லியிருந்தார். அந்தப் புத்தகம் லட்சக்கணக்கில் விற்றது. நடன அமைப்பாளர் கலா என்னைப் பற்றி ஒரு வீடியோ போட்டிருந்தார். அந்த வீடியோவை 300 பேர்தான் பார்த்திருந்தார்கள். ஆனால் நான் பேசியதை லட்சக்கணக்கானோர் பார்க்கிறார்கள். நீங்கள் நடனம் ஆடி சம்பாதிக்கிறீர்கள். நாங்கள் பேசி சம்பாதிக்கிறோம்.
விதிவிலக்குகள் இருக்கிறார்கள்: சினிமாவில் இருக்கும் எல்லோருமே தவறானவர்கள் கிடையாது. ஆனந்த்ராஜ், நதியா மாதிரி சில பேர் விதி விலக்காகவும் இருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்கள், நடிகைகள் தங்களது வாரிசை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பவில்லை. இதற்கெல்லாம் காரணம் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த அனுபவம்தான். தனிமனித ஒழுக்கம் இல்லாத நடிகர்கள், நடிகைகள் பற்றி நான் பேசுவது தொடரத்தான் செய்யும். என்னை நீங்கள் குறை சொன்னால், உங்களது நான்கு விரல்களும் உங்களையே குறை சொல்கிறது என்று அர்த்தம்" என்றார். அவரது இந்தப் பேச்சு புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











