Dhanush - ஹோட்டலில்தான் அது நடந்தது.. தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு பற்றி பிரபலம் சொல்றத கேளுங்க

சென்னை: நடிகர் தனுஷ் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை தற்போது பிரிவில் நிற்கிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் தனுஷ் - ஐஸ்வர்யா குறித்து பேசியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ் பல விமர்சனங்களை கடந்து இன்று மிகச்சிறந்த நடிகர் என்ற இடத்தில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் இவர் எல்லாம் நிலைக்கவே மாட்டார் என்று பலரும் கூறினர். ஆனால் அவர்களின் கணிப்பை தவிடுபொடியாக்கி கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார் தனுஷ். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் ரொம்பவே அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடும் அவர் ஆடுகளம், அசுரன் படங்களுக்காக தேசிய விருதையும் வாங்கியிருக்கிறார்.

Bayilvan Ranganathan Talks about Dhanush Aishwarya Rajinikanth Seperation

கேப்டன் மில்லர்: அவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. மேலும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியும் படத்தின் கதை தனது பட்டத்து யானை நாவலின் கதை என்றும் கூறி பரபரப்பை கிளப்பினார். அடுத்ததாக தனுஷ் சேகர் கம்முல்லா படத்தில் நடித்துவருகிறார். ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இயக்குநர் தனுஷ்: தனுஷ் நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலித்துவருகிறார். ராஜ்கிரண் உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கிய பவர்பாண்டி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தனது 50ஆவது படத்தையும் அவரே இயக்குகிறார். அதுதொடர்பான வேலைகள் முடிந்துவிட்டன. கண்டிப்பாக பவர் பாண்டி படம் போல இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இயக்குநர் ஐஸ்வர்யா: தனுஷை போல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் இயக்குநராக இருக்கிறார். 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் அடுத்ததாக வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் அவர் இயக்கிய எந்தப் படமும் ஒழுங்காக போகவில்லை. உச்சக்கட்டமாக லால் சலாம் தோல்விக்கு ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதுதான் காரணம் என அவர் சொன்னதை ரசிகர்கள் வறுத்தெடுத்துவிட்டனர்.

பிரிந்த தனுஷ்: இதற்கிடையே தனுஷ் கடந்த 2004ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு பிறகு பிரிவில் நின்றது. இருவரும் பிரிந்தாலும் இதுவரை இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாக கூறப்படுகிறது.

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் தனுஷ் - ஐஸ்வர்யா குறித்து பேசுகையில், “ஆந்திராவில் ஒரு ஹோட்டலில் தனுஷும், ஐஸ்வர்யாவும் இருந்தபோதுதான் அந்த விவாகரத்து விஷயம் நடந்தது. அதாவது அங்கிருந்தபடிதான் இரண்டு பேரும் தாங்கள் பிரிவதாக அறிவித்தார்கள். அது ரஜினிக்கும் அவரது மனைவிக்கும் ரொம்பவே அதிர்ச்சியை கொடுத்தது. இருந்தாலும் அவர்களை சேர்த்து வைக்க முயன்று வருகிறார்கள். அதேபோல் தன்னுடைய மகன்களான யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு பேருக்காகவும் தனுஷுடன் மீண்டும் இணைவதற்கு ஐஸ்வர்யா முடிவெடுத்திருப்பதாக சொல்கிறார்கள். விரைவில் அவர்கள் இரண்டு பேரும் இணைவார்கள்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X