அப்பா உயிரோடு இருக்க நீ அதை செய்யணும்.. ஐஸ்வர்யா தனுஷுக்கு கண்டிஷன் போட்டாரா லதா ரஜினிகாந்த்?
சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் அவரது 50ஆவது படமாகும். அதனை அவரே இயக்கவும் செய்திருந்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இந்தப் படம் தவிர்த்து இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இட்லி கடை உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க தனுஷ் - ஐஸ்வர்யா இப்போது பிரிந்திருக்கிறார்கள். அதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
இயக்குநரின் மகன் என்ற அடையாளத்தோடு அறிமுகமான தனுஷ் ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை சந்தித்தார். முக்கியமாக அவரது உருவத்தை வைத்து பலரும் கேலி செய்தார்கள். ஆனால் வெல்வதற்கு அழகைவிடவும் திறமை அதீத முக்கியம் என்பதை உணர்ந்து தனது திறமையை வளர்த்து இன்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார். முக்கியமாக நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, திரைப்படங்கள் தயாரிப்பது என பல ப்ளாட்பார்ம்களில் ஜொலிக்கிறார் அவர்.

ராயன்: நடிகராக கலக்கிவந்த தனுஷ் பவர் பாண்டி படத்தில் இயக்குநராக அறிமுகமாகி வெற்றி கண்டார். அடுத்ததாக தனது 50ஆவது படமான ராயனை தானே இயக்கி நடித்தார். அதில் எஸ்ஜே சூர்யா, சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா, அபர்ணா முரளி என ஏகப்பட்டோர் தனுஷுடன் நடித்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ராயன் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அரத பழசான கதையை சுமாரான திரைக்கதையுடன் பட்டி டிங்கரிங் பார்த்து கொடுத்ததால்தான் படம் படுத்துவிட்டது என்று ரசிகர்கள் கூறினார்கள்.
குபேரா: ராயன் படத்தை முடித்த தனுஷ் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார். வாத்தி படத்தை வைத்து தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்திருந்த அவருக்கு அந்தப் படம் சொல்லிக்கொள்ளும்படி போகவில்லை. எனவே குபேரா படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவும் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் இட்லி கடை என்ற படத்தை இயக்கவிருக்கும் அவர்; இப்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
பிரிவு: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தனுஷ். ஆனால் கடந்த சில வருடங்களாக பிரிந்திருக்கின்றனர். அதேசமயம் சமீபத்தில்கூட அவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டு பேருமே ஆஜராகவில்லை. எனவே தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் இணையப்போவதாக ரசிகர்கள் ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவர்கள் பற்றி பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.
கண்டிஷன் போட்ட லதா?: அவர் அந்த வீடியோவில், "தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர்கள் விவாகரத்தை ரத்து செய்துவிட்டதாக சொல்கிறார்கள். ரஜினிகாந்த் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை பரிசோதித்த மருத்துவர் லதாவிடமும் குடும்பத்தினருடமும். ரஜினிக்கு மன அமைதியும் சந்தோஷமும் தேவை என்று சொல்லியிருக்கிறார். ரஜினியின் மன அமைதி கெட்டதற்கு லதாவுக்கு காரணம் தெரியும்.
உடனே தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவிடம் சென்று, அப்பா நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்றால் நீ தனுஷுடன் இணைந்து வாழ வேண்டும் என்று கூறினார். ஐஸ்வர்யாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். ரஜினி ஹாஸ்பிட்டலில் இருந்தபோதுகூட அவரை நேரில் சென்று சந்தித்த தனுஷ் கலங்கியபடி மன்னிப்பு கேட்டார். மேலும் சில நாட்களுக்கு முன்புகூட வேட்டையன் படத்தின் ப்ரிவ்யூ காட்சி திரையிடப்பட்டது. அதில் தனுஷும் ஐஸ்வர்யாவும் கலந்துகொண்டார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











