Dinasari Review: சீரியலா? படமா? ஒரே குழப்பம்.. தினசரி படத்தை விமர்சித்த பயில்வான்!
சென்னை: சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பாளர் சிந்தியா லூர்தே கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் தினசரி. ஜி சங்கர் இயக்கி இருக்கும் இப்படத்தில், ஸ்ரீகாந்த், எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன், வினோதினி, எம்.ஆர்.ராதாரவி, பிரேம்ஜி, சாம்ஸ், கே.பி.ஒய்.சரத், சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்
தினசரி திரைப்படம் காதல் தினத்தை முன்னிட்டு 14ந் தேதி தியேட்டரில் வெளியானது. இந்தபடம் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் ஈகோவை பற்றி படமாகும். இதில் ஹீரோவாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்தின் எண்ணம், எல்லாமே பணம் தான். பணத்தை வைத்துத்தான் மதிப்பு புகழ் வருகிறது என நினைக்கிறார். இதற்காக தனக்கு வரும் வருங்கால மனைவி வேலை செய்பவளாக இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார் ஸ்ரீகாந்த் பல பெண்களை தேடியும் ஸ்ரீகாந்திற்கு பொருத்தமான பெண் அமையாததால், அமெரிக்காவிலில் நல்ல வேலையில் கைநிறைய சம்பளம் வாங்கும் சிந்தியாவை ஒருபேசி முடிக்கிறார்.

தினசரி திரைப்பட விமர்சனம்: ஆனால், சிந்தியாவிற்கோ திருமணத்திற்கு பிறகு பணியில் தொடர்வதில் விருப்பமில்லை. இதை தெளிவாக ஸ்ரீகாந்தின் அம்மாவிடம் சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை மறைத்து பொய் சொல்லி திருமணத்தை நடத்தி வைக்கிறார். திருமணத்திற்கு பின் சிந்தியா வேலைக்கு செல்ல மாட்டேன் என பிடிவாதம் பிடிப்பதால் ஸ்ரீகாந்துக்கும் சிந்தியாவிற்கும் இடையே பிரச்சனை உருவாகி இருவரும் கணவன் மனைவியாக இல்லறவாழ்க்கையில் இணையாமல் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் ஸ்ரீகாந்தின் புத்தி பணத்திற்காக வேறு திசையில் செல்ல, அதில் சில பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? ஸ்ரீகாந்தும் சிந்தியாவும் கணவன் மனைவியாக வாழ்ந்தார்களா இல்லையா? என்பது தான் தினசரி திரைப்படத்தின் கதை.
பாஸ் மார்க் வாங்கிய தினசரி: நடிகர் ஸ்ரீகாந்த் எத்தனையோ திரைப்படத்தில் பலவிதமான கதாபாத்திரத்தில் நாம் பார்த்திருக்கிறோம் ஆனால், இந்த திரைப்படத்தில் கணவனாக அழகாக நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். அதேபோல இந்த படத்தில் ஹீரோயினாக வரும் சிந்தியா, வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் ஹீரோயினுக்கான முக அமைப்பு, உடல் அமைப்பு, எவ்வனம் என எதுவுமே இல்லை. இருந்தாலும், இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதால், தினசரி படத்தில் அவரே கதாநாயகியாக நடித்திருக்கிறார். இது ஒரு குடும்ப படம் என்பதால், பல காட்சிகளில் சீரியலை பார்ப்பது போல இருக்கிறது. இந்த படத்திற்கு பயில்வான் ரங்கநாதன் 100க்கு 38 மதிப்பெண் கொடுத்து தினசரி படத்தை ஜெஸ்ட் பாஸ் ஆக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











