அந்த நடிகையுடன் சீனு ராமசாமிக்கு தொடர்பா?.. பயில்வான் ரங்கநாதன் ஓவரா பேசுறாரே

சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். மனிதர்களுக்கிடையேயான உறவுகளை மையமாக வைத்தும்; மனிதத்தை மையமாக வைத்தும்தான் இவரது படங்கள் வெளியாகும். கடைசியாக அவரது இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லத்துரை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. சூழல் இப்படி இருக்க தான் விவாகரத்து பெறுவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்து அதிர்ச்சி கிளப்பினார் சீனு ராமசாமி.

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து கூடல்நகர் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனுராமசாமி. முதல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சீனுராமசாமி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குநராக வருவார் என கணிக்கப்பட்டார். இந்தப் படத்துக்கு பிறகு தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கினார் சீனுராமசாமி. இந்தப் படம்தான் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக முதல் படம் ஆகும். படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்தப் படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதனால் மேலும் கவனிக்கப்படும் இயக்குநர் ஆனார் சீனு ராமசாமி.

seenu ramasamy bayilvan ranganathan

முக்கியமான இயக்குநர்: தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு பிறகு சீனுராமசாமி நீர்ப்பறவை படத்தை இயக்கினார். படத்தின் காட்சிகளும், வசனங்களும் பெரிதும் ரசிகர்களை ஈர்த்தன. ஆனால் வசூல் ரீதியாக படம் சரியாக போகவில்லை. இருப்பினும் நீர்ப்பறவைக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கவே செய்கின்றனர். சீனு ராமசாமியின் கேரியரில் மிக முக்கியமான படமாக கருதப்படுவது தர்மதுரை. இன்றளவும் அது கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

தர்மதுரை: தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதி, ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதற்கு முன்னதாக சீனுராமசாமி இயக்கிய படங்கள் கொண்டாடப்படாலும் தர்மதுரை படத்தை அனைவரும் கொண்டாடினார்கள். வீட்டில் இருக்கும் அனைவரும் ஒதுக்கும் மகன் மீது தாய் வைத்திருக்கும் பாசம், காதலியை இழந்த பிறகு ஒருவன் தத்தளிப்பது என சீனுராமசாமி இயக்கத்தில் பின்னியிருப்பார். இந்தப் படத்தில் பாடல் எழுதியதற்காக வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து: கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான கோழிப்பண்ணை செல்லத்துரை திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. சூழல் இப்படி இருக்க தானுன், தனது மனைவியும் விவாகரத்து பெறுவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார் சீனு ராமசாமி. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அன்பானவர்களுக்கு வணக்கம் நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார்.

பயில்வான் ரங்கநாதன்: இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்' என்று குறிப்பிட்டிருந்தார். சூழல் இப்படி இருக்க பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இந்த விவகாரம் குறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சீனு ராமசாமியை எனக்கு ஆரம்பகாலத்திலிருந்தே தெரியும். தனியார் சேனல் ஒன்றில் கேமராமேனாக இருந்தார்.

விட்டுக்கொடுத்து போக வேண்டும்: அதுமட்டுமின்றி நல்ல எழுத்தாளரும்கூட. அவர் ஏகப்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். இடம் பொருள் ஏவல் படத்தின்போது அவர் மீது நடிகை மனிஷா யாதவ் பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்தார். அதற்கு சீனு ராமசாமி பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. இப்போது விவாகரத்து என்கிறார். அவருக்கும் கோழிப்பண்ணை செல்லத்துரை நடிகைக்கும் தொடர்பு என்று கிசுகிசுக்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அதேசமயம் சீனு ராமசாமியின் மனைவி கொஞ்சம் விட்டுக்கொடுத்து போயிருக்கலாம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X