தனிக்குடித்தனத்துக்கு ஆசைப்பட்டாராம் சைந்தவி.. அதான் டைவர்ஸாம்.. பயில்வான் என்னமோ சொல்றாரு பாருங்க

சென்னை: இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது பள்ளி காலத்திலேயே சைந்தவியை காதலித்துவந்தார். இருவரும் பல வருடங்கள் காதலித்த பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்த ஜிவி - சைந்தவி இப்போது பிரிந்திருக்கிறார்கள். இரண்டு பேருமே அதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்கள். இந்தச் சூழலில் அவர்கள் குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

கோலிவுட்டின் ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் அந்தப் படத்திலேயே தனது அசாத்திய திறமையை காண்பித்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக குறுகிய காலத்திலேயே வளர்ந்துவிட்டார். பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் அதகளம் செய்யக்கூடிய ஜிவி பிரகாஷ். அதற்கு உதாரணமாக ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.

Bayilvan Ranganathan GV Prakash Saindhavi

நடிகர் ஜிவி பிரகாஷ்: சூழல் இப்படி இருக்க ஜிவி பிரகாஷ் நடிகராகவும் அறிமுகமாகி தொடர்ந்து நடித்துவருகிறார். வாரா வாரம் வெள்ளிக்கிழமைக்கு அவரது ஒரு படம் ரிலீஸாகிவிடுகிறது. இருந்தாலும் நடிகராக எதிர்பார்த்த வெற்றி அவருக்கு இன்னமும் கிடைக்கவில்லை. டார்லிங், த்ரிஷா இல்லைனா நயன்தாரா, சர்வம் தாள மயம், சிகப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்கள் மட்டும் ஜிவி பிரகாஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன. கடைசியாக வெளியான டியர், கள்வன் ஆகிய படங்கள் படுத்துவிட்டன.

திருமணம்: இதற்கிடையே அவர் பள்ளி படித்ததிலிருந்தே சைந்தவியை காதலித்துவந்தார். பிறகு 2013ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார். அவர்களுக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். சைந்தவி பின்னணி பாடகியாகவும் ஜொலிப்பவர். ஜிவியின் இசையில் ஏராளமான பாடல்களை பாடியவரும்கூட. கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக இரண்டு பேரும் வலம் வந்தனர். இந்தச் சூழலில் திருமண வாழ்க்கையை நாங்கள் இரண்டு பேரும் முடித்துக்கொள்வதாக அறிவிப்பை வெளியிட்டனர்.

பயில்வான் ரங்கநாதன் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து குறித்து பேசியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீயையும் (விடுதலை பட ஹீரோயின்), ஜிவியின் தந்தையையும் தனியாக அனுப்பி வைத்துவிடுங்கள். நாம் தனியாக வாழலாம் என்று சைந்தவி ஜிவி பிரகாஷிடம் கூறினார். ஆனால் ஜிவி பிரகாஷ் அதனை கேட்கவில்லை. அதனால்தான் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று ஒருதரப்பினர் சொல்கிறார்கள்.

மனீஷா யாதவ்: அதேபோல் இன்னொரு தரப்பினரோ, நடிகைகளுடன் ஜிவி பிரகாஷ் உறவு வைத்துக்கொண்டார். திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தில் நடிகை மனீஷா யாதவ்வுக்கு முத்தம் கொடுக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது ஜிவி பிரகாஷ் 36 முறை மனீஷா யாதவ்வின் உதட்டில் முத்தம் கொடுத்திருக்கிறார். இதுகூட காரணமாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்" என்றார் பயில்வான் ரங்கநாதன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X