கெஸ்ட் ஹவுசுக்கு வா.. பாலியல் புகாரில் சிக்கும் பெரிய நடிகர்.. பயில்வான் சொன்ன தகவல்!
சென்னை: ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது போல, பிரபல நடிகர் திலகனின் மகள், மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதில் இருந்து பல நடிகைகள் புகார் கூறிவருகின்றனர். அந்த வகையில், ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து சித்திக் விலகினார்.

நடிகர் ரியாஸ் கான்: இதைத்தொடர்ந்து, நடிகை ரேவதி சம்பத், நடிகர் ரியாஸ் கான் மீது கடுமையான குற்றச்சாட்டை கூறினார். அதில், எனக்கு இரவு ரியாஸ் கானிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது அவர், என்னை தகாத உறவிற்கு அழைத்தார். என்னை மட்டுமின்றி என் நண்பர்களையும் அழைத்துர சொன்னார் என்று ஹேமா கமிஷன் முன்பு புகார் கூறியுள்ளார்.
ஆதாரமற்ற புகார்: இந்த குற்றச்சாட்டை மறுத்த ரியாஸ் கான், அந்த பெண் யார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் சினிமாவில் 36 வருடமாக இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 300க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து இருக்கிறேன். இதுவரை யாரும் இதுபோன்ற எந்த ஒரு புகாரையும் என் மீது கூறியது இல்லை. அந்த பெண் போனில் பேசியது நான் தான் என்று எப்படி சொல்ல முடியும்., சினிமாவைச் சேர்ந்த அனைவருக்கும், என்னை பற்றி நன்றாகத் தெரியும். இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறியிருந்தார்.
பயில்வான் ரங்கநாதன்: இதுகுறித்து வீடியோவில் பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன், ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள சினிமாவில் புயலை கிளப்பி உள்ளது. சித்திக் மீது பாலியல் ரீதியான புகார் கூறப்பட்டது. மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலுக்கு தெரியாமல் இருக்குமா என்றும், தெரிந்து இருந்தால் ஏன் மோகன்லால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதற்கு நடிகர் சங்கத் தலைவர் மோகன் லாலும் உடைந்தையாக இருக்கிறாரோ என்கிற சந்தேகம் வருகிறது என்று மலையாள நடிகைகள் சந்தேகத்தை எழுப்பினர். இதனால் மோகன் லாலுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து மோகன் லால் உட்பட 17 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
பெரிய நடிகர் மீது புகார்: மேலும், பிரபல குணசித்திர நடிகர் திலகனின் மகள் பத்திரிக்கையாளரிடம், பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். அதில், என் தந்தை இறந்த போது ஒரு பெரிய நடிகர் என்னிடம் போனில் பேசினார். அப்போது, நான் உன் அப்பா போன்று என்று பேசத்துவங்கிய அவர், பின் நான் உன்னை பெரிய நடிகையாக ஆக்குகிறேன் கெஸ்ட் ஹவுசுக்கு வா என்றார். நான் அப்படியே அதிர்த்து போனேன் என்று கூறியிருந்தார். எனவே மலையாள சினிமாவில் இதுபோன்று தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று பேசி இருந்தார். இப்போது கேரளாவில் அனைத்து இடத்திலும் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாகி உள்ளது என்று, இதில் எத்தனை பெரிய தலைகள் உருளப்போகிறதோ தெரியவில்லை என பயில்வான் அந்த வீடியோவில் கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











