இளையராஜா vs தீனா சண்டைக்கு காரணம் இதுதான்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத் தேர்தலில் இசையமைப்பாளர் தீனா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில், இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவின் தம்பி சபேசன் வெற்றி பெற்றார். மேலும்,இந்த தேர்தலில், தீனாவிற்கும் கங்கை அமரனுக்கும் பிரச்சனை வர முக்கிய காரணம் இதுதான் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற இருந்தது. இந்த தேர்தலில், இதுவரை வாக்கு உரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் சபேரேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்தது.

Bayilvan Ranganathan talks About Ilaiyaraja And Dheena Issue

தீனா தோல்வி அடைந்தார்: இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை தள்ளுபடி செய்ததோடு, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் இரண்டாவது முறையாக இசையமைப்பாளர் தீனா தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதில், இசையமைப்பாளரும், தேனிசை தென்றல் தேவாவின் தம்பி சபேசன் வெற்றி பெற்றார்.

மோசடி செய்தார்: மேலும், தீனா அவர்கள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி 4 வருடம் ஆண்டிருக்கிறார். அடுத்தும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது விதி மீறல் என்று கங்கை அமரன் செய்தியாளர்களிடம் பேசி இருந்தார். மேலும், இந்த யூனியனில் நடக்க கூடாத பல சம்பவங்கள் நடந்துள்ளது. தீனா மறைந்த பாடகி பாவதாரிணி பெயரில் பல லட்சத்தை சுருட்டி விட்டார் என்று கங்கை அமரன் கூறியிருந்தார்.

பிரச்னைக்கு காரணம் இதுதான்: இந்த விவகாரம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தீனா பல முறைகேடுகளை செய்து இருப்பதாக கங்கை அமரன் குற்றம் சாட்டினார். மேலும், மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடாது என்று இளையராஜா சொன்னதற்கு வாடா, போடா என்று தீனா பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும், இளையராஜா, இசையமைப்பாளர் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டிடம் தட்டித் தருகிறேன் என்று சொன்னார். ஆனால், அதில் இருந்து அவர் பின்வாங்கி விட்டார் என்று தீனா மீது குற்றம்சாட்டினார். இதுதான் தீனா இளையராஜா பிரச்சனைக்கு காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X