இளையராஜா மூஞ்சிலேயே முழிக்கக்கூடாது.. பவதாரிணி உயிரிழப்புக்கு கங்கை அமரன் வரல.. பயில்வான் ஓபன் டாக்

சென்னை: இளையராஜாவின் மகளும் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு இளையராஜா குடும்பத்தினரையும், சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடல் பண்ணைபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கங்கை அமரன் மற்றும் இளையராஜா குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இளையராஜாவின் மகள் பவதாரிணி பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வந்தவர். அவருக்கு பித்தப்பையில் புற்றுநோய் இருந்தது கால தாமதமாக தெரியவந்தது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ஆயுர்வேத சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் அவரை இலங்கைக்கு அழைத்து சென்றனர். அங்கு சில வாரங்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

Bayilvan Ranganathan Talks about Ilayaraaja And Gangai Amaran Controversy

பண்ணைபுரத்தில் நல்லடக்கம்: இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடல் முதலில் அஞ்சலிக்காக சென்னையில் இருக்கும் இளையராஜாவின் வீட்டில் வைக்கப்பட்டது. பிறகு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. தனது தாய் ஜீவா மற்றும் பாட்டி சின்னத்தாயி ஆகியோரின் அருகில் இப்போது அவர் உறங்கிக்கொண்டிருக்கிறார். பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது ஏராளமானோர் நேரில் வந்து தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

கங்கை அமரன் வரவில்லை?: பலரும் பவதாரிணியின் உடலுக்கு வந்து அஞ்சலி செலுத்தினாலும் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் நேரில் வரவில்லை என்று கூறப்படுகிறது. அது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக அவர் வராததற்கு இளையராஜாவுடன் இருக்கும் மனஸ்தாபம்தான் காரணம் என்றும் ஒரு விஷயம் சொல்லப்படுகிறது. அவர் வராவிட்டாலும் அவரது மகன்களான வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பயில்வான் ரங்கநாதன் பேச்சு: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், "இளையராஜாவைவிட கங்கை அமரனுக்குத்தான் இசை ஞானம் அதிகம். கங்கை அமரன் இசையமைத்த பல பாடல்களுக்கு இளையராஜா தனது பெயரை போட்டுக்கொண்டார். இளையராஜா எல்லோரிடமும் தகராறு செய்பவர். ஏவிஎம்முடன் தகராறு செய்து பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்றார்; பிறகு அவரை அங்கிருந்து காலி செய்ய சொன்னதற்கு முடியாது என்று தகராறு செய்தார். ஆனால் அவர் வாடகையே கொடுக்கவில்லை என்று பிரசாத் ஸ்டூடியோ சொன்னது.

பாதுகாப்பு அரண்: அதேபோல் பாலசந்தர் மற்றும் மணிரத்னத்திடம் தகராறு செய்தார். அதனால்தான் அவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தினார்கள். அதேபோல் வைரமுத்துவுடன் தகராறு ஏற்பட்டபோது கங்கை அமரன் மட்டும்தான் இளையராஜாவுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தார். அந்த சமயத்தில் வந்த பல வசை சொற்களை கங்கை அமரன் எதுவுமே சொல்லாமல் ஏற்றுக்கொண்டார் என்பது மட்டும்தான் உண்மை.

வெளியே போடா நாயே: இளையராஜாவுக்கு கங்கை அமரன் இவ்வளவு செய்தாலும் ஒருமுறை கங்கை அமரனை பார்த்து வெளியே போடா நாயே என்று சொல்லிவிட்டார் இளையராஜா. இப்போது கங்கை அமரன் இளையராஜாவுடன் சமாதானமாக இருந்தாலும் பழைய நினைவுகளை அவரால் மறக்க முடியவில்லை.

தனியாகத்தான் இருக்கிறார்: கங்கை அமரன் இப்போது தனியாகத்தான் இருக்கிறார்.தனக்கு வந்த எம்.பி பதவியையே தனக்கு வேண்டாம் அண்ணனுக்கு கொடுங்கள் என்று சொன்னவர் கங்கை அமரன். நாம் அண்ணனுக்கு எவ்வளவு செய்திருக்கிறோம். அதையெல்லாம் மறந்துவிட்டாரே என்ற எண்ணம் கங்கை அமரனுக்கு இன்னமும் இருக்கிறது. அதனால்தான் பவதாரிணி உயிரிழப்புக்குக்கூட அவரால் வர முடியவில்லை. இனி அண்ணன் முகத்திலேயே விழிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்"என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X