அந்த பேஸ்புக் நண்பர் யார்? ஜெயம் ரவி ஆர்த்தி பிரிவுக்கு என்ன காரணம்?.. பயில்வான் போட்ட குண்டு!
சென்னை: ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு குறித்து மௌனம் கலைத்துள்ள ஆர்த்தி அறிக்கையில் வெளியிட்டு இருந்தார். அதில், இந்த விவாகரத்து முடிவு ஜெயம் ரவியின் தன்னிச்சையான முடிவு என்று ஆர்த்தி கூறியிருக்கும் நிலையில் இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 2003ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரவி. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் இவருடைய அடையாளமாக ஜெயம் என்கிற சொல்லை தனது பெயரோடு இணைத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப்படத்தில் நடித்து குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறினார் ஜெயம் ரவி.

காதல் திருமணம்: இதைத்தொடர்ந்து, 2009-ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்ற நிலையில், கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. இதனால், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம்ரவியுடன் எடுத்த அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்தார். ஆனால், இணையத்தில் பரவி வந்த விவாகரத்து குறித்த வெளியான செய்திகளுக்கும் பதில் அளிக்காமல் மௌனமாக இருந்தனர்.
விவாகரத்து முடிவு: இதையடுத்து, நடிகர் ஜெயம் ரவி, தானாக முன்வந்து, தனது எக்ஸ் தளத்தில் விவாகரத்து முடிவை அறிவித்தார். அந்த அறிக்கையில், பல்வேறு யோசனைகளுக்கு பின்னரே இந்த முடிவை எடுத்திருக்கிறேன். தன்னை சார்ந்திருப்பவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு.இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கும் மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.இந்த முடிவு எனது சொந்த முடிவு என வெளியிட்டு இருந்தார். அவரின் இந்த திடீர் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வேதனை அடைந்தேன்: ஜெயம் ரவியின் இந்த முடிவு குறித்து,வாய் திறந்த ஆர்த்தி,ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும், மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆர்த்தியின் அறிக்கையின் மூலம் ஜெயம் ரவி தன்னிச்சையாக தன்னுடைய மனைவிடம் எந்த விதமான ஒப்புதலும் இல்லாமல் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
ஜெயம் ரவியை சந்திக்க முடியல: இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், நான் ஆர்த்தியின் அம்மாவிடம் பேசினேன். அதற்கு அவர், என் மகள் அடிக்கடி ஜெயம் ரவிக்கூட சண்டை போடுவா, பிறகு அவர்களே சமாதானம் ஆகி விடுவார்கள். ஆனால், இந்த முறை என்ன சண்டை என்று எனக்குத் தெரியவில்லை. நான் கடந்த சில மாதமாக ஜெயம் ரவியிடம் பேச முயற்சி செய்தேன். அவர் தனியாக மும்பைக்கு சென்று தங்கிவிட்டார் அவர் சந்திக்க முடியவில்லை என்று கூறினார். ஜெயம் ரவியே அந்த அறிக்கையில் நான் யார் மனதையும் புண்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறார். அப்படி இருக்கும் போது, மனைவி ஆர்த்தியிடம் இதுகுறித்து பேசி இருக்க வேண்டும். அவரிடம் கலந்து பேசாமல் இவராக தனிச்சையாக ஒரு முடிவு எடுத்து இருக்கிறார்.
பயில்வான் ரங்கநாதன்: ஆர்த்தி அழகானவர், நிறைய இயக்குநர்கள் அவரை நடிக்க வைக்க விரும்பினார்கள். ஆனால் ஆர்த்தி மறுத்துவிட்டார். அவர் அழகாக இருந்தது தான் ஜெயம் ரவியின் சந்தேகத்திற்கு காரணம். அதே போல ஆர்த்தி ஒரு நடிகர் ஒருவருடன் பேஸ்புக்கில் பேசி கொண்டு இருந்தார். இது ஜெயம் ரவிக்கு தெரியவந்ததால், இருவருக்கும் இடையே சண்டை வந்தது. பின் ஆர்த்தி, ஜெயம் ரவியிடம் பேசி அதை சரி செய்துவிட்டார். அதற்கும் ஜெயம்ரவியின் இந்த முடிவுக்கும் சம்மந்தம் இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











