25 கோடிக்கு நோ சொன்ன மாமியார்?.. ஜெயம் ரவி - ஆர்த்தி பிரச்னைக்கு இதுவா காரணம்?.. பற்ற வைத்த பிரபலம்
சென்னை: கோலிவுட்டில் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர் ஜெயம் ரவி. சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து அவர் வந்திருந்தாலும் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் திரைப்படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. அடுத்ததாக அவர் ஜெனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வருகின்றன.
தமிழ் சினிமாவில் எடிட்டராக பல படங்களுக்கு பணி புரிந்த மோகனின் இளைய மகன் ரவி. மோகனுடைய மூத்த மகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரவி; முதல் படத்திலேயே பிரமாண்டமான வெற்றியை ருசித்தார். அழகு மட்டுமின்றி திறமையும் அவரிடம் இருந்ததால் ரசிகர்களிடையே கவனத்தையும் ஈர்த்தார். அதற்கு பிறகு தொடர்ந்து தனது அண்ணன் இயக்கிய ரீமேக் படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டார் ஜெயம் ரவி.

நல்ல நடிகர்: அண்ணன் இயக்கத்தில் மட்டுமில்லாமல் வெளி இயக்குநர்களின் இயக்கத்திலும் நடிக்க ஆரம்பித்த அவர்; நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ஜெயம் ரவி கடைசியாக சைரன் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக ஜெனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் சமீபகாலமாக ஒரு பிரமாண்ட வெற்றிக்காக கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார் ரவி.
ஜெயம் ரவியின் குடும்பம்: ஜெயம் ரவி கல்லூரி படிக்கும்போது ஆர்த்தி என்பவரை காதலித்தார். பிறகு வீட்டு சம்மதத்துடன் அவரையே திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆரவ், ஆயான் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆரவ் ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார். இவரது மனைவி ஆர்த்தியின் தாயார் சுஜாதார் ஒரு தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து: கடந்த 2009ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இருவரது திருமண வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருக்க கடந்த சில நாட்களாகவே இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ரவியின் மனைவியோ அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக; ஜெயம் திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி போஸ்ட் ஒன்றை போட்டிருந்தார். அதேசமயம், தனது இன்ஸ்டாகிராமிலிருந்து ஜெயம் ரவியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை டெலிட்டும் செய்தார்.
பயில்வான் ரங்கநாதன் கொடுத்த ஷாக்: ஃபோட்டோக்களை டெலிட் செய்ததால் அவர் ஜெயம் ரவியை பிரியப்போவதாக பலரும் கூறுகிறார்கள். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் இந்த விவகாரம் குறித்து ஒரு வீடியோவில் பேசுகையில், "ஜெயம் ரவியின் மாமனார் விஜயகுமாரும், சுஜாதாவும் ஒரு படத்தில் நடித்தபோது காதலித்தார்கள். பிறகு திருமணம் செய்துகொண்டார்கள். சுஜாதா மிகப்பெரிய பணக்காரர். கல்பனா ஹவுஸ் என்ற பங்களாவின் ஓனரும் அவர்தான். மேலும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார்.
25 கோடி பிரச்னை: ஆர்த்தியை ஜெயம் ரவி திருமணம் செய்துகொண்ட பிறகு வீட்டோடு மாப்பிள்ளை ஆனார். ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியின் மார்க்கெட் சரிய தொடங்கியதை அடுத்து ஜெயம் ரவியை வைத்து படங்களை தயாரித்தார். அப்படி அவர் கடைசியாக தயாரித்த சைரன் படம் முதலுக்கு மோசமில்லை என்ற நிலையில் தப்பித்தது. சூழல் இப்படி இருக்க பாண்டிராஜ் சுஜாதாவிடம் கதை சொன்னார். அந்தக் கதை பிடித்துப்போனதை அடுத்து; ஜெயம் ரவியை ஹீரோவாக போட்டு 53 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க ஒத்துக்கொண்டார் சுஜாதா.
ஆனால் ஜெயம் ரவியோ தனக்கு சம்பளமாக 25 கோடி ரூபாய் கேட்டார். அதற்கு மாமியாரோ, 'உங்களுக்கு மார்க்கெட் அவ்வளவு இல்லையே' என்று கூற; ரவியோ விடாப்பிடியாக 25 கோடியில் நின்றார். பிறகு இயக்குநரை அழைத்த சுஜாதா, பட்ஜெட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல; தான் வாங்கிய ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸை அவரிடமே திருப்பி கொடுத்துவிட்டு விஜய் சேதுபதியிடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார். இது ஜெயம் ரவியின் காதுகளுக்கு செல்ல; இவற்றுக்கெல்லாம் காரணம் தனது மாமியார்தான் என்று நினைத்து பேசியிருக்கிறார். இதனால், ஆர்த்தியுடனும், அவரது மாமியாருடனும் தொடர்ந்து சண்டை வந்தது. இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது" என்று கூறி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











