கணவரிடம் இணக்கமாக இரு.. ஜானி மாஸ்டரின் மனைவியே அப்படி சொன்னாரா?.. புதுசா கெளம்புதே

சென்னை: கேரள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை கிளப்பிய புயல் மற்ற மொழி திரைத்துறைகளிலும் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. அந்தவகையில் தெலுங்கு, தமிழ் திரையுலகில் ஃபேமஸ் நடன அமைப்பாளராக திகழும் ஜானி மாஸ்டர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதனையடுத்து ஜானி கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்; நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.

கேரள திரையுலகில் சமீபமாக ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் பூகம்பத்தை கிளப்பியிருக்கிறது. அதனையடுத்து மற்ற மொழி திரையுலகிலும் பாலியல் தொல்லைகள் தொடர்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் பிரபல நடன அமைப்பாளராக இருக்கும் ஜானி மாஸ்டர் மீது ஒரு பெண் பாலியல் புகார் அளித்தார். அதாவது அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என்றும்; தான் மைனராக இருக்கும்போதே அப்படி செய்தார் என்று தெரிவித்திருந்தார்.

bayilvan ranganathan johnny master

ஜானி கைது: இதனையடுத்து ஜானி மாஸ்டர் கோவாவில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார். சூழல் இப்படி இருக்க அந்தப் பெண் தான் தனக்கு டார்ச்சர் கொடுத்ததாக ஜானி மாஸ்டர் தனது வாக்குமூலத்தில் கூறினார். மேலும் ஜானியின் மனைவி இதுகுறித்து பேசுகையில், 'ஜானிதான் அந்தப் பெண்ணுக்கு உதவினார். பாலியல் வன்கொடுமை செய்தார் என்றால் அதனை ஏன் முன்னரே அந்தப் பெண் சொல்லவில்லை. அப்பெண்ணை தனது கணவர் பாலியல் வன்கொடுமை செய்தது உண்மை என்று நிரூபித்தால் அவரிடமிருந்து விலகுவதற்கு தயார்' என்று அதிரடியாக தெரிவித்தார்.

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் இந்த விவகாரம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஜானி மாஸ்டரை நடனம் அமைக்க சொல்லி விஜய்யே அழைப்பார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பிரபலமானவராக இருக்கிறார் ஜானி. இவரிடம் 7 வருடங்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் நடனம் பயின்றார். ஆனால் அந்த சிறுமிக்கு உணவுக்குக்கூட வழியில்லை.எனவே ஜானிதான் அடைக்கலம் கொடுத்து பார்த்துக்கொண்டார்.

பொறுத்துக்கொண்ட சிறுமி: அந்தச் சிறுமி இளம்பெண் ஆனவுடன் ஜானி மாஸ்டர் தனது சேட்டைகளை ஆரம்பித்தார். அதனை அந்த இளம்பெண்ணும் பொறுத்துக்கொண்டார். தன்னை விட்டால் இந்தப் பெண்ணுக்கு வேறு வழியில்லை என்று ஜானி கொஞ்சம் ஓவராகவே ஆடிவிட்டார். அதற்கு பிற்கு டான்ஸ் மாஸ்டர் யூனியனில் சேர்க்க பணத்தையும் கட்டினார் ஜானி. இப்படிப்பட்ட சூழலில்தான் ஜானிக்கு அந்தப் பெண் தொடர்ந்து விருந்தாக்கப்பட்டார்.

மனைவியே சொன்னார்: ஜானியின் மனைவியே அந்தப் பெண்ணிடம் சென்று தனது கணவனை திருமணம் செய்துகொள்ளசொன்னார். அவருக்கு வேண்டியபடி இணக்கமாக இரு என்றும் சொல்லியிருக்கிறார். இப்போது அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் பக்குவமான வயது வந்துவிட்டது. சொந்த ஃபிளாட் வாங்கிவிட்டார். இந்தச் சூழலில்தான் ஜானி மாஸ்டர் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர்களும் ஜானியை அதிரடியாக கைது செய்துவிட்டனர்.

இது புதிது இல்லை: ஜானி மாஸ்டருக்கு இது புதிது கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பையனை இதேபோன்று டார்ச்சர் செய்தார். அப்போது அந்த பையன் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். இவர் நல்ல மாடெல்லாம் கிடையாது. அதனால் இப்போது ஜானி சிறைச்சாலையில் மீண்டும் இருக்கிறார். கணவரின் அனைத்து தவறுகளுக்கும் உடந்தையாக இருந்துகொண்டு அவர் நல்லவர் என்று மனைவி சொல்கிறார். விரைவில் ஜானியின் மனைவியும் கைது செய்யப்படுவார்"என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X