சின்னத்திரையிலும் பாலியல் சீண்டலா? சீரியலை விட்டு வெளியேறிய நடிகரின் மகள்.. பயில்வான் பகீர் தகவல்!

சென்னை: நடிகர்,இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து, அருவி சீரியலில் நடித்தார். இந்த தொடர் முடிந்த நிலையில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்,மௌனம் பேசியதே என்ற சீரியலில் நடித்து வந்தார். திடீரென சீரியலிலிருந்து நடிகை ஜோவிதா விலகுவதாக அறிவித்துள்ளார். அதோடு, அதற்கான காரணம் குறித்தும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதில், நடிப்பு உள்பட பலவற்றை நான் மாற்றிக் கொள்ள விரும்பினேன். ஆனால், எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இந்த சீரியலிலிருந்து நான் விலகிவிட்டேன். இந்த சீரியலில் என்னுடைய ரோலின் பெயர் துளசி. இந்த ரோலானாது கலாச்சாரத்திற்கு எதிரானதாக என்னை மாற்றியது. சுயநலமான ஒரு கதாபாத்திரம். இத்தனை நாட்களாக இந்த சீரியலில் நடித்து வந்த நிலையில் அது எனக்கு கஷ்டமாக இருந்ததால் அதில் இருந்து விலகுகிறேன் கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன்.

jovitha mounam pesiyadhe bayilvan ranganathan

பயில்வான் பகீர் தகவல்: அதில், கலாச்சாரத்திற்கு எதிரான கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார் அது மட்டும் இல்லாமல் எப்படியாவது சினிமாவை விட்டு விலகி வேறு தொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான சூழ்நிலை அமையவில்லை என்றும் கூறியிருந்தார். மேலும்,சொல்ல முடியாத சில தொந்தரவுகள் இருந்ததால், மௌனம் பேசியதே சீரியலில் இருந்து வெளியேறி விட்டதாக கூறியிருந்தார். இப்படி எதையுமே வெளியே வெளிப்படையாக ஜோவிகா சொல்லவில்லை. ஒருவேளை சீரியலில் அவருக்கு பாலியல் சீண்டல், ஏதாவது நடந்ததா? அதை அவர் சொல்லாமல் மறைக்கிறாரா என்று தெரியவில்லை.

jovitha mounam pesiyadhe bayilvan ranganathan

வேறு வழியே இல்லை: ஏனென்றால் அவர் இன்னும் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடிக்க வேண்டி இருப்பதால், அது குறித்து அவர் பேசாமல் மறைத்திருக்கிறார். ஜோவிகா மட்டுமல்லாமல், பல சின்னத்திரை நடிகைகளும் இந்த விஷயத்தை வெளியில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த பாலியல் சீண்டல் என்பது இன்று நேற்று நடப்பவை அல்ல. சீனிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த சீண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

jovitha mounam pesiyadhe bayilvan ranganathan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X