ஓட்டலில் தான் தங்குகிறார் ஜோதிகா.. சிவக்குமார் வீட்டிற்கு வருவதே இல்லை.. பயில்வான் சொன்ன தகவல்!

சென்னை: தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்படுபவர் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சேர்ந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கினார்கள். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என செட்டிலாகி விட்டார்கள். இவர்களுக்கு தேவ், தியா என ஒரு மகள் ஒரு மகன் இருக்கிறார்கள்.

அண்மையில் ஜோதிகா குடும்பத்தோடு மும்பையில் சென்று செட்டிலாகி அங்கே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக மாதவனுடன் சைத்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து, புதிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். தனுக்கு மட்டுமில்லாமல் தனது கணவர் சூர்யாவிற்கும் இந்தி படத்தில் வாய்ப்பு கேட்டு வருகிறார்

jyothika suriya Bayilvan Ranganathan

ஜோதிகா கவர்ச்சி உடை: சமீபத்தில் ஜோதிகா, பிலிம்பேர் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். வழக்கமாக இதுபோன்ற விழாவிற்கு வரும் ஜோதிகா வசீகரம் இல்லாத ஆடையை அணிந்து வருவார். ஆனால், இந்த முறை எப்போதும் இல்லாத அளவுக்கு படு கிளாமரான உடை அணிந்து வந்து போஸ் கொடுத்தார். கருப்பு நிற பிளேசர் போட்டுக்கொண்டு உள்ளே இருக்கும் உள்ளாடை அப்பட்டமாக காட்டி போஸ்ட் கொடுத்து இருந்த இந்த புகைப்படங்கள் பார்த்து மோசமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள் ரசிகர்கள்.

பேசு பொருளானது: இதுகுறித்து பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன், சோஷியல் மீடியாவில் இப்போது பேசு பொருளாகி இருப்பது, ஜோதிகா கவர்ச்சி உடை அணிந்து வந்தது தான். திருமணமான இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பின் இப்படி கவர்ச்சி உடையில் வரலாமா என்றும், இதற்கு எப்படி சூர்யா அனுமதித்தார் என்று கேள்விகளை இணையவாசிகள் கேட்டு வருகின்றனர். இதில், சிவக்குமாரையும் விட்டுவைக்காமல் திட்டி தீர்த்து வருகின்றனர்.

உண்மை காரணம்: ஆனால், ஜோதிகா இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு என்னை நான் மறுவரையறை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார். அதாவது இந்தி படத்திற்காக தன்னை மறுவரையறை செய்வதாக கூறியுள்ளார். முதலில், குழந்தைகளின் படிப்புக்காக மும்பை சென்றதாக சொன்னார். ஆனால், அதன் அளித்த பேட்டியில் என் பெற்றோருக்கு வயதாகி விட்டதால், அவர்களை பார்த்துக்கொள்ளவும், குழந்தைகளின் படிப்புக்காவும் மும்பை சென்று இருப்பதாக கூறினார். அதே போல, நானும் சூர்யாவும் சென்னை வந்தால், தி நகரில் உள்ள மாமனார் வீட்டில் தான் தங்குவோம் என கூறியிருந்தார்.

ஓட்டலில் தங்குகிறார்: ஜோதிகா சொல்வது உண்மை இல்லை, ஜோதிகா சென்னை வந்தாலும், மாமனார் வீட்டில் தங்குவது இல்லை, விமான நிலையத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கிவிட்டு, மீண்டும் விமானத்தில் மும்பை சென்று விடுகிறார். அவர் மறந்தும்கூட மாமனார் வீட்டுக்கு வருவது இல்லை. சூர்யா மட்டும் தி நகர் வீட்டுக்கு வந்து பெற்றோரை பார்த்துவிட்டு செல்கிறார்.

மும்பையில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி அதில் குடியேறி உள்ளார். மேலும், சூர்யாவிற்காக இந்தி பட வாய்ப்பை தேடி வருகிறார். இப்படி கணவனுக்காக அவர் பார்த்து பார்த்து செய்து வருகிறார். இதுக்கு மேல என்ன வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஜோதிகா கவர்ச்சி உடை அணிந்ததை அவருடைய கணவரே ஏற்றுக்கொண்ட போது, நாம் கருத்து சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X