இரண்டு பேருக்குமே பாடி டிமாண்ட் அதிகம்… பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சென்னை: திரைப்பட நடிகரும், சினிமா பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், முன்னணி நடிகர் ஒருவர் குறித்தும், அவரின் வாரிசு குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்று சொல்வார்கள், அப்படித்தான் அந்த நடிகை திருமணம் தாண்டிய உறவில் வாழ்ந்து வருகிறார் என்று பேசி உள்ளார். இவரின் இந்த பேச்சு தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.
அதில் உலகநாயகன் கமல்ஹாசன் குறித்து பேசி உள்ளார். அந்த காலத்தில் கமல் சும்மா அப்படி இருப்பாரு அவரின் அழகுக்கு பல பெண்கள் வந்தார்கள். ஆனால், கமல் மேல் நாட்டு மருமகள் படத்தில் தன்னுடன் நடித்த வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து இருவரும் சிறிது காலம் வாழ்ந்தனர். ஆனால், ஏதோ கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

சரிகாவுடன் காதல்: அதன் பின் கமல் சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சரிகா ஒரு இஸ்லாமிய பெண் என்பதால், அவருக்காக கமல் இஸ்லாமியராக மாறினார். அவர்களின் வாழ்க்கை பல ஆண்டுகள் நீடித்தது. இதன் அடையாளமாக ஸ்ருதி, அக்ஷரா ஹாசன் இருவரும் பிறந்தனர். ஆனால், இந்த திருமண வாழ்க்கையும் நீடிக்காமல் போய் கமல், சரிகா இருவரும் பிரிந்துவிட்டனர். அதைத்தொடர்ந்து கமல், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கௌதமியுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கான பல உதவிகளை செய்துள்ளார். கௌதமியை மட்டுமில்லாமல் அவரது மகளையும் தன் மகள் போல் பார்த்துக்கொண்டார். இருந்த போதும் கமல், கௌதமி இருவரும் பரஸ்பரமாக பேசி பிரிந்து விட்டனர். தற்போது கமல் யாருடன் வாழ்ந்து வருகிறார் என்று தெரியவில்லை.
எல்லை மீறிய பழக்கம்: கமல், சரிகாவிற்கு பிறந்த ஸ்ருதி ஹாசன் 7ம் அறிவு படத்தில் அறிமுகம் ஆகி, தனுஷூடன் 3 படத்தில் நடித்தார். அந்த படத்தை ஐஸ்வர்யாவே இயக்கிய போதும், அதில் முத்தக்காட்சிகள் எல்லாம் இருந்ததால், ஸ்ருதி, தனுஷ் இருவரும் எல்லை மீறி பழக தொடங்கினார்கள். இந்த விஷயம் ரஜினிக்கு தெரிந்து, அவர் கமலிடம் பேசி பிரச்சனையை முடித்துவைத்தார். அதன் பின் ஸ்ருதி, தனுஷ் நண்பர்களாகவே இருப்போம் என்று பேசி பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு பல நடிகர்களுடன் ஸ்ருதி ஹாசனின் பெயர் பலமுறை அடிபட்டது.
சாந்தனுவுடன் காதல்: இதைத்தொடர்ந்து வெளிநாட்டு நண்பர் ஒருவரை காதலிப்பாக பகிரங்கமாக அறிவித்தார். அப்போது, அவருடன் பட்டு புடவையில் இருக்கும் போட்டோக்கள் எல்லாம் வெளியாகி நிச்சயம் நடந்து விட்டது என்றெல்லாம் செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து, மும்பையில் சாந்தனு என்பவருடன் வாழ்ந்து வந்தார். அவர் மறந்துக்கூட சென்னைக்கு வந்து அப்பாவை சந்திக்கவில்லை, அதே அக்ஷராவும் மும்பையில் தாயுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரும் கமலுடன் இல்லை. இப்போது ஸ்ருதி, சாந்தனுவை விட்டு பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
திருமணம் ஒரு சடங்கு: ஆனால், அது உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருக்கிறது. ஸ்ருதி திருமணத்தில் ஈடுபாடு இல்லாதவராக இருக்கிறார். திருமணம் என்பது ஒரு சடங்குதான் மனதளவில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் போதும் என்று நினைப்பதால் அவர் பல ஆண்டுகளாக சாந்தனுவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். எப்படி அவரது தந்தை திருமணம் தாண்டிய உறவில் இருந்தோரோ அதே போல அவரின் மகளும் இருக்கிறார் என்று பயில்வான் அந்த பேட்டியில் பேசி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த பேன்ஸ், பயில்வான் உனக்கு இதே வேலையா போச்சு என்று கமெண்ட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











