Keerthy suresh: கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் வெடித்த சர்ச்சை.. மதம் மாறினாரா கணவர்!

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழிப்படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது 15 வருடக் காதலரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் தடபுடலாக நடைபெற்றது. இவர்களின் திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில் பேசி உள்ளார்.

அதில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். ஆண்டனி கிறிஸ்தவர் என்பதால் கோவாவில் உள்ள பிரபலமான சர்ச்சில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால் கிறிஸ்துவ மதத்தில் திருமணம் நடைபெற்றது போன்ற, எந்த ஒரு புகைப்படமும் இணையத்தில் வெளியாகவில்லை. ஆனால், கிறிஸ்தவரான ஆண்டனி, நெற்றியிலே நாமம் போட்டுக் கொண்டு ஐயங்கார் சமூகத்தை சேர்ந்தவர் போல இருந்தார். கீர்த்தி சுரேஷின் அப்பா ஐயங்கார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தனது மருமகனான ஆண்டனிக்கும் நாமத்தை போட்டு உள்ளார். அந்த அடிப்படையிலேயே கிறிஸ்தவராக இருந்த ஆண்டனி தற்போது இந்துவாக மதம் மாறி, அப்பாவின் மடியில் அமர்ந்து இருந்த கீர்த்தி சுரேஷூக்கு எழுந்து நின்று தாலிகட்டி உள்ளார்.

keerthy suresh antony thattil bayilvan ranganathan

சர்ச்சையில் விஜய்: இந்த திருமணத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார். இவர்களின் திருமண வரவேற்பு சென்னையில் நடக்க இருந்தாலும், கீர்த்தி சுரேஷ் தன்னுடைய படங்களில் நடித்து இருப்பதால், நட்பின் அடையாளமாக நேரடியாக கோவாவிற்கே சென்று மணமக்களை வாழ்த்தியிருக்கிறார் விஜய். இந்த திருமணத்தில் திரிஷாவும் கலந்து கொண்டதால், விஜய், த்ரிஷா இருவரும் ஒன்றாக விமானத்தில் பயணம் செய்தது போன்ற வீடியோக்களும் வெளியாகி அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

keerthy suresh antony thattil bayilvan ranganathan

தொடர்ந்து நடிப்பாரா: திருமணத்திற்கு பின்பும் கீர்த்தி சுரேஷ் நடிப்பாரா என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் இன்னும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. இதனால் கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிப்பார். இதற்கு எந்த விதமான தடையையும் ஆண்டனி தட்டில் போட மாட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X