கீர்த்தி சுரேஷ் கிறிஸ்துவராக மதம் மாறுகிறாரா? கோவாவில் நடக்கும் திருமணம்.. பயில்வான் சொன்ன தகவல்!
சென்னை: தமிழ் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா, சிவகார்த்கேயன் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கீர்த்தி சுரேஷ். தற்போது அவருக்கு 32 வயதாகும் நிலையில், தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், இதுகுறித்த பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார்.
அதில், நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய அம்மா மேனகா மிகப்பெரிய நடிகை, அவர் கே பாலசந்தர் இயக்கத்தில் உருவான நெற்றிக்கண் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை மேனகாவின் அம்மாவும் ஒரு நடிகை தான், அவர் பல திரைப்படங்களிலும், விளம்பர திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ், ஒரு பாஜக பிரமுகர் ஆவார். இதனால், கீர்த்தி சுரேஷ் அரசியலில் நுழையப்போகிறார் என்கிற செய்தி கூட பரவின.

பயில்வான் ரங்கநாதன்: சினிமாவிற்கு வந்து குறுகிய காலத்திலேயே கீர்த்தி சுரேஷ் புகழின் உச்சிக்கு சென்று விட்டார். குறிப்பாக நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார். அந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்ரியாக நடித்தார் என்று சொல்வதைவிட, அவராகவே வாழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு இயல்பாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பேன் என்று முடிவு எடுத்ததால், கீர்த்தி சுரேஷூக்கு பட வாய்ப்பு குறைந்தது.
காதலருடன் திருமணம்: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திருமண அறிவிப்பை அறிவித்திருக்கிறார். இந்த திருமண அறிவிப்பை திடீரென அறிவிப்பதற்கு முக்கிய காரணம், கடந்த சில நாட்களாகவே இசையமைப்பாளர் அனிருத்தும், கீர்த்தி சுரேஷும் காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இணையத்தில் செய்திகள் பரவி வந்தன. அந்த வதந்திகளை தடுப்பதற்காகவே கீர்த்தி சுரேஷ் தனது காதலர் குறித்த விவரத்தையும் திருமணம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.
கோவாவில் திருமணம்: நடிகை கீர்த்தி சுரேஷின் காதலர் ஆன்டனி தட்டில், துபாயில் ஒரு பெரிய தொழிலதிபராக இருக்கிறார் என்றும், இவர்கள் இருவரும் 13 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததை அடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளனர். இவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் கோவாவில் ஒரு தேவாலயத்தில், நடைபெற இருக்கிறது. ஆண்டனி தட்டில் கிறிஸ்தவர் என்பதால் தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் இந்து பெண் என்பதால் கிறிஸ்துவராக மாறி திருமணம் செய்து கொள்வாரா, இல்லை கிறிஸ்தவ முறைப்படி காதலரை திருமணம் செய்து கொள்வாரா? இல்லை, மீண்டும் இந்து முறைப்படி கேரளாவில் திருமணம் நடைபெறுமா என்பது தெரியவில்லை. ஆனால், திருமணம் கோவாவில் தேவாலயத்தில் நடைபெற இருக்கிறது என்கிற தகவல் மட்டும் தற்போது தெரியவந்துள்ளது என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிரபலமானார்: நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் நடித்துள்ளார். மேலும் கேரளாவில் ஃபேஷன் டிசைனிங் பயின்று வந்த இவர், பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடித்த 'இது என்ன மாயம்' படத்தில், அமைதியான பெண்ணாக நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையானார். அந்த படத்தை தொடர்ந்து, தொடரி, ரஜினி முருகன், ரெமோ என அடுத்தடுத்த படத்தில் நடித்து பிரபலமானார்.


Click it and Unblock the Notifications











