மஞ்சுளாவுக்கு விஜயகுமாரின் துரோகம் இதுதானாம்.. பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்.. புது பஞ்சாயத்து ஸ்டார்ட்

சென்னை: விஜயகுமார் தன்னுடைய ஆரம்பகாலத்தில் ஹீரோவாக நடித்து பிறகு காலம் செல்ல செல்ல குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். 90களில் பெயர் சொல்லும்படியான குணசித்திர நடிகராக வலம் வந்த அவர் தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அவருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதல் மனைவி வழி வந்த பேத்தி தியாவுக்கு சமீபத்தில்தான் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இந்தச் சூழலில் விஜயகுமார் தனது இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் அவர் 90களில் மிகவும் பிரபலமான குணசித்திர நடிகராக வலம் வந்தவர். நாட்டாமை, நட்புக்காக உள்ளிட்ட படங்களில் விஜய்குமாரின் நடிப்பு பலரையும் ரசிக்கும்படி செய்தது. விஜயகுமாருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதல் மனைவி முத்துக்கண்ணு உயிரிழந்த சூழலில் நடிகை மஞ்சுளாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

Bayilvan Ranganathan Talks about Manjula And Vijayakumar

பிள்ளைகள்: மஞ்சுளாவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கு பிறந்தவர்கள்தான் அனிதா, கவிதா, அருண் விஜய். மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் ப்ரீதா, வனிதா, ஸ்ரீதேவி. இவர்களில் வனிதாவும், ஸ்ரீதேவியும் சில படங்களில் ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர். வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரீதா இயக்குநர் ஹரியை திருமணம் செய்திருக்கிறார்.

அருண் விஜய்: அருண் விஜய்யும் பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருபவர்தான். இருந்தாலும் அவருக்கு சரியான திருப்புமுனை கிடைக்காமல் இருந்தார். இந்தச் சூழலில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து மாஸ் காண்பித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் மீண்டும் கிடைக்க ஆரம்பித்தன. தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்திருக்கிறார். படம் மே மாதம் ரிலீஸாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் அவருக்கு பெரிய பிரேக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

மூத்த மனைவி மகள்கள்: விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கு பிறந்த அனிதா, கவிதா ஆகிய இரண்டு பேருமே மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் அனிதாவின் மகள் தியாவுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. மூக்கின் மேல் விரல் வைக்கும்படி படு பிரமாண்டமாக நடந்த அந்த திருமணத்தில் விஜயகுமாரின் ஒட்டுமொத்த சொந்தமும் குழுமியது. ஆனால் வனிதாவுக்கு மட்டும் அழைப்பு செல்லவில்லை. ஏற்கனவே வனிதாவுக்கும், விஜயகுமாருக்கும் இடையே சில பிரச்னைகள் கடந்த சில வருடங்களாகவே ஓடிக்கொண்டிருக்கின்றன.

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விஜயகுமார் பற்றி பேசி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "விஜயகுமார் எம்ஜிஆர் ரசிகராக மாங்குடி மைனர் என்ற படத்தில் நடித்தார். பிறகு அதிமுகவில் இணைந்து அந்தக் கட்சியின் கொடியை கையில் பச்சை குத்திக்கொண்டார். அந்தச் சூழலில் எம்ஜிஆருடன் நிறைய படங்களில் நடித்த மஞ்சுளாவை திருமணமும் செய்துகொண்டார் அவர்.

Bayilvan Ranganathan Talks about Manjula And Vijayakumar

தூக்கி எறியப்பட்ட விஜயகுமார்: ஆனால் சில நாட்களிலேயே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அதிமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்டார் விஜயகுமார். மஞ்சுளாவுக்கு விஜயகுமாரால் பாதுகாப்பு கிடைத்தது. மஞ்சுளா நிறைய சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருந்தார். ரஜினிகாந்த்தை வைத்து கை கொடுக்கும் கை படம் எடுப்பதற்காக குட் லக் தியேட்டரை விற்றார் விஜயகுமார். அவர் தனது முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மகள்களை மருத்துவம் படிக்க வைத்தார். ஆனால் மஞ்சுளாவுக்கு பிறந்த மூன்று மகள்களையும் படிக்க வைக்கவில்லை. ஏன் படிக்க வைக்கவில்லை. இது துரோகம் இல்லையா. அவர் ஒரு கண்ணில் வெண்ணையையும், மறுகண்ணில் சுண்ணாம்பையும் வைத்துக்கொண்டவர்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X