Mysskin: மிஷ்கின் திருந்த காரணம் அந்த நடிகையா?.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன தகவல்!
சென்னை: இயக்குநர் மிஷ்கின் குறித்த சர்ச்சைகள் இன்னும் முடிந்த பாடில்லை. எங்கு திரும்பினாலும் அவரது பேச்சும், அதன் பின்னர் அவரது மன்னிப்பு குறித்தும்தான் பல தகவல்கள் வந்துக் குவிந்து கொண்டே உள்ளது. இப்படியான நிலையில் நடிகரும் பிரபல பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், மிஷ்கின் குறித்து தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
பாட்டில் ராதா படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், இயக்குநர் மற்றும் நடிகர் மிஷ்கின் பேசும்போது, ஆபாசமான வார்த்தைகளைத் தொடர்ந்து பேசினார். மேலும் இளையராஜா உள்ளிட்ட பலரையும் ஒருமையில் பேசினார். அப்படி இருக்கும்போது, அவரது பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கவிஞர் தாமரை தொடங்கி, பல நடிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். அதன் பின்னர் பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பதாக கூறினார்.

மேலும் அந்த நிகழ்வில் பேசும்போது, தனது பிசாசு 2 படத்தின் கதையை ஆண்ட்ரியாவிடம் கூறும்போது படத்தில் நிர்வாணகாட்சிகளில் நடிக்கவேண்டியது இருக்கும் எனத் தெரிவித்தேன். ஆண்ட்ரியா ஒப்புக் கொண்டார். ஆண்ட்ரியாவை நிர்வாணமாக புகைப்படம் எடுக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளும், நடைபெற்றது. அந்த போட்டோ சூட்டினை எனது பெண் உதவி இயக்குநரை வைத்து எடுத்தேன். ஆண்ட்ரியா ஒரு அறைக்குள் சென்றுவிட்டு நிர்வாணமாக வெளியே வரவேண்டும். நான் அந்த அறையில் இருந்து கீழே வந்து, பின்னர் எனது அலுவலகத்திற்கு வந்துவிட்டேன்.
ஆண்ட்ரியா: அதன் பின்னர் ஆண்ட்ரியா எனக்கு போன் செய்து எங்கு இருக்கின்றீர்கள் சார் எனக் கேட்டார். நான் அவரிடம்," உனது நிர்வாணப் புகைப்படங்களை நான் வெளியிட்டால் எனது படம் நல்லபடியாக ஓடிவிடும். ஆனால் படத்தைப் பார்க்கும் அனைவரும் உன்னை, நான் பார்த்த இலக்கியப் பார்வையில்தான் பார்ப்பார்களா என்றால் அது கேள்விக்குறிதான். உனது நிர்வாணத்தை பலரும் விரசமாக பார்க்ககூடும். எனவே, இந்தக் காட்சிகள் வேண்டாம்" எனக் கூறிவிட்டேன் எனக் கூறினார்.
பயில்வான்: இது தொடர்பாக நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறும்போது, " மிஷ்கின் வழக்கமாகவே மூன்று எழுத்து கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுவார்தான். ஆனால் அன்றைய தினம் எல்லாமே கொஞ்சம் ஓவராக போய்விட்டது. யாராவது அவரைக் கண்டித்திருந்தால், அது சரியாக இருந்திருக்கும். ஆனால் யாருமே அவரைக் கண்டிக்கவில்லை.
மாற்றம்: அதேபோல் பிசாசு 2 படத்திற்காக ஆண்ட்ரியாவை நிர்வாணமாக புகைப்படங்களை எடுத்த பின்னர், தான் பார்த்த இலக்கியப் பார்வையில் ரசிகர்களும் பார்ப்பார்களா எனக் கேட்டுவிட்டு, அந்தக் காட்சிகளை படமாக்காமல், விட்டுவிட்டார் என்றால், ஆண்ட்ரியாவின் நிர்வாண ஃபோட்டோ சூட்டிற்குப் பின்னர்தான் அவரிடத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிசாசு 2 படத்திற்காக மிஷ்கின் மற்றும் ஆண்ட்ரியா என இருவருமே ஆவலோடு காத்துக்கொண்டு உள்ளார்கள்" எனப் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











