திருமணத்திற்கு முன் காதலனுடன் வாழ்ந்த சோபிதா.. குடும்பமே அப்படித்தான்.. கொளுத்திப்போட்ட பயில்வான்!

சென்னை: நடிகர் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்க்கையில் இணைந்து இருக்கும் இந்த தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பயில்வான் ரங்கநாதன், சோபிதா துலிபாலா திருமணத்திற்கு முன் காதலுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தார் என்ற அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.

King 24/7 youtube சேனல் ஒன்றில் பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன், நாக சைதன்யா தெலுங்கு சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான நாகேஸ்வர ராவின் பேரன் நாக சைதன்யா. இவர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இந்த குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருமே விவகாரத்து செய்து, அதன் பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொண்டவர்கள் தான். இதனால், இந்த குடும்பத்திற்கே அந்த பழக்கம் உண்டு என்று சொல்லலாம். நாகார்ஜுனா மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரின் மகளை திருமணம் செய்து கொண்டு பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். அதன் பிறகு தான் நடிகை அமலாவுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு நடிகை அமலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

naga chaitanya sobhita bayilvan ranganathan

குடும்ப பழக்கம்: தந்தையைப் போலவே நாக சைதன்யாவும் தன்னுடன் நடித்த சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் விவகாரத்தை பெற்று பிரிந்தனர். இதை அடுத்து தான் நாக சைதன்யாவிற்கும் சோபிதா துலிபாலாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சோபிதா துலிபாலாவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல.

சோபிதா துலிபாலா: என்.டி.ஆருக்கும் நாகேஸ்வர ராவிற்கும் பிரதான வில்லனாக நடித்தவர் தான் துலிபாலா. தமிழ் சினிமாவில் எப்படி அசோகன், நம்பியார் புகழ்பெற்ற வில்லன் நடிகர்களாக இருந்தார்களோ? அதே போல ஆந்திராவில் புகழ்பெற்ற வில்லன் நடிகராக இருந்தவர் தான் துலிபாலா. அவரின் மகள் தான் சோபிதா துலிபாலா. இவர் சினிமாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பொன்னியன் செல்வன் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

காதலனுடன் வாழ்ந்தார்: தற்போது நாக சைத்னயாவை திருமணம் செய்திருக்கும் சோபிதா துலிபாலாவிற்கு ஏற்கனவே ஒரு காதலன் இருந்துள்ளார்.ஹியூமன் பிராண்டிங் நிர்வாக இயக்குநரான பிரணவ் மிஸ்ராவை சோபிதா காதலித்து வந்தார். பணத்திற்கு குறைவே இல்லை, கோடி கோடியாக சொத்து வைத்து இருக்கும் அவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவருன் லிவ்விங்டூ கெதரில் வாழ்ந்து வந்ததாக ஆந்திர பத்திரிக்கைகளில் பல செய்திகள் வெளியானது. ஆனால், அந்த காதல் கைகூடாமல் போய்விட்டது.

கவர்ச்சி நடிகைதான்: இதையடுத்து, நாக சைத்தன்யாவுடன் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு கூட, பிரணவ் மிஸ்ரா உடன் சோபிதா துலிபாலா லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்ததற்கான போட்டோ ஆதாரங்களுடன் ஆந்திர பத்திரிகைகள் பல செய்திகளை வெளியிட்டு வந்தது. ஆனால், நாக சைதன்யா சோபிதாவின் பழைய வாழ்க்கை பற்றி நினைக்காமல் தற்போது அவரை திருமணம் செய்து கொண்டார். சோபிதாவும் சமந்தாவை போல கவர்ச்சியாக நடிக்க தயங்கவே மாட்டார். இயக்குனர் 80 சதவீதம் காட்ட சொன்னால், 90 சதவீதம் கவர்ச்சி காட்டக்கூடிய நடிகை தான். இதனால், மீண்டும் நாக சைத்தன்யா வாழ்க்கையில் புயல் வீசினாலும் வீசலாம் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X