குழந்தை வேண்டுமா?.. நெப்போலியன் மகனுக்கு சிக்கல்?.. அடுத்து நிலவில் திருமணம்.. ஷாக் கொடுத்த பிரபலம்
சென்னை: நெப்போலியனின் மூத்த மகனான தனுஷுக்கு சில நாட்களுக்கு முன்புதான் ஜப்பானில் ஜாம் ஜாம் என்று திருமணம் நடந்து முடிந்தது. அமெரிக்காவில் திருமணத்தை நடத்தினால் சில பிரச்னைகள் வரும் என்பதால் ஜப்பானில் இத்திருமணம் நடத்தப்பட்டது. மணமக்களுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவரும் சூழலில் தனுஷ் - அக்ஷயா திருமணம் குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் சினிமாவில் அறிமுகமான நெப்போலியன் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோ, வில்லன் என நடித்த அவர் அரசியல்வாதியாகவும் இருந்தவர். மத்திய அமைச்சராக பதவி வகித்த அவர்; இப்போது பாஜகவில் ஐக்கியமாகியிருக்கிறார். தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு நெப்போலியனின் நெருங்கிய உறவினர் என்ற பேச்சும் உண்டு. ஒருகட்டத்தில் தனது மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருந்தது நெப்போலியனுக்கு தெரியவந்தது.

அமெரிக்காவில் செட்டில்: அதனையடுத்து இந்தியாவிலிருந்து வெளியேறிய அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு தனுஷ் தவிர்த்து குணால் என்ற மகனும் இருக்கிறார். தனுஷின் தசை சிதைவு நோய்க்கு இந்தியாவில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அங்கு தனுஷுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஓரளவுக்கு பலன் அளித்தது. அங்கு நெப்போலியன் அமெரிக்க குடியுரிமையையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மகனுக்கு திருமணம்: தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த நெப்போலியன்; அக்ஷயா என்ற நடுத்தர வர்க்கத்து பெண்ணை பார்த்தார். அக்ஷயாவும் இத்திருமணத்துக்கு முழு சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து நிச்சயதார்த்தம் முடிந்தது. பிறகு ஜப்பானில் சில நாட்களுக்கு முன்பு தனுஷ் - அக்ஷயா திருமணம் நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டிலிருந்து திரையுலகத்தை சேர்ந்த சில முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். ஆனால் அரசியல் பிரமுகர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

மீண்டும் திருமணம்: அமெரிக்காவில் திருமணத்தை நடத்தினால் சில சட்ட சிக்கல்கள் வரும் என்பதால்தான் ஜப்பானில் திருமணம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இன்னும் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் அமெரிக்காவில் தனுஷ் - அக்ஷயா திருமணம் நடத்தப்படும் என்று சமீபத்திய பேட்டியின்போது நெப்போலியன் கூறியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க பயில்வான் ரங்கநாதன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
பயில்வான் பேட்டி: அவர் அளித்த பேட்டியில்,"நெப்போலியனின் இரண்டாவது மகன் குணாலிடம்; உங்கள் அண்ணனுக்கு ஜப்பானில் திருமணம் நடந்தது. உங்களுக்கு எங்கே நடக்க வேண்டும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, 'நிலவில் திருமணம் செய்துகொள்ள ஆசை. எனது அப்பா செலவு செய்வார். அதற்கான வசதிகள் கூடிய பிறகு அப்படி நடக்கும்' என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அவர் விளையாட்டாக சொன்னாரா இல்லை சீரியஸாக சொன்னாரா என்பது அவருக்கே தெரியும்.
குழந்தை வேண்டும்னா?: தனுஷைப் பொறுத்தவரை திருமண ஆசை வந்தவுடனேயே அவருக்கு உடலுறவு ஆசையும் இருப்பது உறுதியானது. தனுஷால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஒருவேளை பிறக்கும் குழந்தைக்கும் தனுஷுக்கு இருக்கும் தசை சிதைவு நோய் வரலாம் என்ற சிக்கல் இருக்கிறது. எனவே வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதேபோல் தனது மருமகள் அக்ஷயாவுக்கு 200 கோடி ரூபாய் மதிப்பில் வீடு, 100 சவரனுக்கும் மேல் நகைகள், தங்க கட்டிகள் ஆகியவைகளை நெப்போலியன் கொடுத்திருப்பதாக தகவல்' என்றார்.


Click it and Unblock the Notifications











