மீண்டும் நயன்தாரா - பிரபுதேவா விவகாரத்தை கிளறிய பயில்வான் ரங்கநாதன்.. இப்போ என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: Nayanthara (நயன்தாரா) நயன்தாராவை பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலத் வீடு தேடி சென்று அடித்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
கோலிவுட்டின் டாப் ஹீரோயின் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமான அவர் அதன் பிறகு வரிசையாக பல படங்களில் நடித்து ஃபேமஸ் ஆனார். தொடர்ந்து வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடன் காதல் ஏற்பட்டது. ஆனால் அந்தக் காதல் பாதியில் முடிந்தது. அதனையடுத்து சிங்கிளாக இருந்த அவர் வில்லு படத்தில் நடித்தபோது பிரபுதேவாவை காதலித்தார். ஆனால் அந்தக் காதலும் முறிந்தது.

திருமணம்: பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு சில வருடங்கள் சிங்கிளாக இருந்த நயன்; நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார்.
பயில்வான் ரங்கநாதன் வீடியோ: இந்நிலையில் நயன்தாரா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் பேசிய வீடியோவில், "தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. எந்த கதாபாத்திரம் கொடுத்தால் அதை நேர்த்தியாக ஹேண்டில் செய்து நடித்தார்.
அடி வாங்கிய நயன்தாரா: ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட காதல் தோல்விகள். முதலில் சிம்புவுடன் காதல் வயப்பட்டு படுக்கையை பகிர்ந்தார். அதன் பிறகு பிரபுதேவாவை காதலித்தார். அதனால் உச்சக்கட்ட கோபமடைந்த பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் நயன்தாராவின் வீட்டை தேடி சென்று அவரை திட்டிவிட்டு தாக்கினார்.
கண்டிஷன் போட்ட நயன்: நயன்தாராவுடன் உறவில் இருந்தாலும் பிரபுதேவா தனது குழந்தைகளை பார்த்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால் அப்படி செய்யக்கூடாது என நயன்தாரா கண்டிஷன் போட்டார். அதற்கு பிரபுதேவா ஒத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள்.
விக்னேஷ் சிவன்: நயன்தாரா சமீபத்தில்தான் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சொகுசு கார் ஒன்றை கணவர் விக்னேஷ் சிவன் பரிசளித்தார். அந்தக் காரில் அவ்வளவு வசதிகள் இருக்கின்றன. அவருக்கு சொந்தமாக ஜெட் விமானமும் இருக்கிறது. இது போக 8 கார்கள்வரை இருக்கின்றன. கிட்டத்தட்ட அவருக்கு 200 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











