Nayanthara - தயாரிப்பாளர் மொபைலில் இருந்து ஐ லவ் யூ மெசேஜ்.. நயன்தாரா இப்படி செய்தாரா?

சென்னை: Nayanthara (நயன்தாரா)தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மொபைலில் இருந்து நடிகை ஒருவருக்கு நயன்தாரா ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பியதாக பயில்வான் ரங்கநாதன் பற்ற வைத்திருக்கிறார். தற்போது இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது தனது 75ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். 75 படங்களில் நடித்தாலும் அவர் ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. விக்னேஷ் சிவனை திருமணம் செய்திருக்கும் அவருக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

Bayilvan Ranganathan Talks About Nayanthara And Simbu

சிம்புவுடன் காதல்: ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன் தாரா ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பிறகு உச்சம் சென்றார். அந்தப் படத்துக்கு விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இப்படிப்பட்ட சூழலில் கடந்த 2006ஆம் ஆண்டு சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

Bayilvan Ranganathan Talks About Nayanthara And Simbu

பிரிவில் முடிந்த காதல்: படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே சிம்புவுடன் ஏற்பட்ட காதல் திருமணம்வரை செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் அப்போது பேசப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிம்புவுடனான காதல் பிரிவில் முடிந்தது. அந்த சமயத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியும் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

Bayilvan Ranganathan Talks About Nayanthara And Simbu

பிரபுதேவா: சிம்புவுடனான காதலுக்கு பிறகு சிங்கிளாக இருந்த நயன்தாரா வில்லு படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் பிரபுதேவாவை காதலித்தார். பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்ததால் நயன்தாராவின் இரண்டாவது காதலும் சர்ச்சையில் சிக்கியது. இருந்தாலும் பிரபுதேவாவுக்காக மதம் மாறியது, கையில் அவர் பெயரை பச்சை குத்திக்கொண்டது, சினிமாவிலிருந்து வெளியேறியது என அந்தக் காதலுக்காக உண்மையாகவே இருந்தார் நயன். ஆனால் அந்தக் காதலும் பிரிவில் முடிந்தது.

விவகாரம் செய்த நயன்தாரா?: இப்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட அவர் சந்தோஷமாக இருந்துவருகிறார். சூழல் இப்படி இருக்க அவரைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, படத்தின் ஷூட்டிங்கின்போது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மொபைலை வாங்கினாராம் நயன்தாரா. அவரும் எதற்காகவோ கேட்கிறார் என கொடுக்க, தேனப்பன் மொபைலில் இருந்து நடிகை கோபிகாவுக்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் செய்துவிட்டாராம் நயன்.

கோபப்பட்ட கோபிகா: மறுநாள் காலை தேனப்பனுக்கு ஃபோன் செய்த கோபிகா என்ன சார் இப்படி மெசேஜ் செய்திருக்கீங்க என கோபப்பட்டாராம். உடனே பதறிப்போன தேனப்பன் அதை நான் செய்யவில்லை. நேற்று நயன்தாராவிடம் மொபைலை கொடுத்திருந்தேன் அவர் அப்படி செய்திருப்பார் என கூறினாராம்.

அதற்கடுத்து நயன்தாராவிடம் வந்த தயாரிப்பாளர், 'ஏன் மா இப்படி பண்ணிட்ட' என பரிதாபத்தோடு கேட்டாராம். உடனே ஸ்பாட்டில் இருந்த சிம்புவும், நயன்தாராவும் சிரித்து ஒருவழியாக சமாளித்துவிட்டார்களாம். இந்தத் தகவலை சினிமா பத்திரிகையாளர் என கூறிக்கொள்ளும் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

வலுக்கும் கண்டனம்: இதனை கேள்விப்பட்ட நயனின் ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். மேலும், இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது. மேற்கூறிய தகவலை சொன்ன வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் வல்லவன் படத்துக்கு பதிலாக மன்மதன் படம் என்கிறார். அதுமட்டுமின்றி இது நம்ம ஆளு படத்தின்போதுதான் இந்த சம்பவம் நடந்ததாக கூறுகிறார். ஆனால் இது நம்ம ஆளு படத்தை தேனப்பன் தயாரிக்கவே இல்லை.

வல்லவன் படத்தைத்தான் தயாரித்தார். இப்படி ஒரு வீடியோவில் மாற்றி மாற்றி பேசுவதை வைத்தே அவர் கூறுவது எந்த அளவுக்கு பொய் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். பயில்வான் தொடர்ந்து இதுபோன்று பேசுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர் மீது வழக்கு தொடர வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X