நயன்தாரா என்ன கண்ணகியா?.. அடுத்தவரின் கணவருக்கு ஆசைப்படுபவர்.. பரபரப்பை பற்ற வைத்த பிரபலம்
சென்னை: நடிகை நயன்தாராதான் கடந்த சில நாட்களாக கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக இருக்கிறார். தனுஷுக்கு அவர் எழுதிய கடிதம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் நயன் மீது நியாயம் என்று ஒருதரப்பும்; இல்லை அவர் மீது தவறு என்று மறுதரப்பும் கூறிவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் ஆவணப்படம் ரிலீஸாகியிருக்கிறது.
இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா கடந்த 2022ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டார். அதனையடுத்து வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றார். அவர்களுக்கு உயிர், உலக் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சில காதல் தோல்விகளை சந்தித்த நயன் ஒருவழியாக காதலித்தே திருமணம் செய்து இப்போது நிம்மதியாக செட்டிலாகியிருக்கிறார். இருந்தாலும் அவரை சுற்றி சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் இருக்கின்றன.

என்ன சர்ச்சைகள்: அதாவது சென்னை எழும்பூரில் இடையில் சில காலம் தனது கணவர், குழந்தைகளுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தார் அவர். அப்போது அவர் கடுமையான கட்டுப்பாடுகளை மற்றவர்களுக்கு விதித்ததாக சர்ச்சை எழுந்தது. பிறகு போயஸ் கார்டனில் கட்டிக்கொண்டிருந்த பங்களா வேலைகள் முடிந்ததால் அங்கு குடும்பத்துடன் குடியேறிவிட்டார். இதனையடுத்து தனது திருமணத்தை பற்றிய ஆவணப்படத்தை பல கோடி ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு விற்றார்.
தனுஷுடன் மோதல்: அந்த விவகாரத்தில் மேலும் ஒரு பஞ்சாயத்தாக; சில நாட்களுக்கு முன்பு தனுஷை தாக்கி மூன்று பக்க கடிதம் எழுதினார். அதனைப் பார்த்த பலரும்; தான் தயாரித்த படத்துக்கு காப்பி ரைட்ஸ் தனுஷ் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்று அவருக்கு ஆதரவாக ஒருதரப்பினரும், மூன்று நொடிகள் க்ளிப்பிங்கிற்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கலாமா என்று தனுஷுக்கு எதிராக ஒருதரப்பினரும் களத்தில் குதித்திருக்கின்றனர். இருப்பினும் இன்று Nayanthara Beyond The Fairy Tale ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸாகியிருக்கிறது.
சுமாரான ரெஸ்பான்ஸ்: இன்று நயனின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த ஆவணப்படம் ரிலீஸாகியிருக்கிறது. எதிர்பார்ப்பு எதுவும் பெரிதாக இல்லாமல் இருந்த அந்த ஆவணப்படத்துக்கு நயனின் கடிதத்துக்கு பிறகு ஓரளவு எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் பெரிதாக அந்த ஆவணப்படத்தில் எதுவுமே இல்லை என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் குறித்து பேசியிருக்கிறார்.
பயில்வான் பேச்சு: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேசிய அவர், "நயன்தாரா எப்போதும் வியாபார பார்வை உடையவர். அவர் எட்டுக்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவருகிறார். எப்போதும் அவர் பணமே பிரதானம் என்ற நினைப்பில் இருக்கக்கூடியவர். தன்னுடைய திருமணத்துக்கு அவர் பத்திரிகையாளர்கள், மீடியாக்காரர்கள் என யாரையும் அழைக்கவில்லை. திருமண வீடியோவையும் நெட்ஃப்ளிக்ஸுக்கு விற்று பணம் பார்க்கத்தான் யாரையும் அவர் அழைக்கவில்லை.
நீங்கள் என்ன கண்ணகியா?: தனுஷிடம் கேட்காமலேயே நானும் ரௌடிதான் பட காட்சிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். இது தவறு. அதேபோல் விக்னேஷ் சிவனுக்கும், நயனுக்கும் இடையேயான காதலில் தனுஷ் குறுக்கீடு செய்தாரா?.. பிறகு ஏன் தனுஷ் பழிக்கு பழி வாங்குகிறார் என்று நயன் சொல்ல வேண்டும். சரி சாபம் விடுகிறீர்களே சாபம் விடுவதற்கு நீங்கள் என்ன கண்ணகியா?.. நீங்கள் அப்படி இல்லை. வல்லவன் படத்தில் உங்கள் உதட்டை கடிப்பதுபோன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தது. ஹிந்தியில்கூட அப்படி வரவில்லை. சிம்புவுடனான காதல் முறிந்தது. அந்தக் காதலுக்கு பிறகு பிரபுதேவாவை காதலித்தீர்கள். அவர் இன்னொருவரின் கணவர். நீங்கள் இன்னொருவரின் கணவருக்கு ஆசைப்பட்டவர்தானே. பிரபுதேவாவின் மனைவி உங்கள் வீட்டுக்கு வந்து கத்திவிட்டு போகவில்லையா.
ஒன்று என்னுடன் இரு இல்லையென்றால் மனைவி, பிள்ளையுடன் இரு என்று பிரபுதேவாவை சொன்னீர்கள். அவர் தனக்கு பிள்ளைகள் முக்கியம் என்று சென்றுவிட்டார். இப்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்துவிட்டீர்கள். அதேபோல் எல்.ஐ.கே என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிவருகிறார். அதில் என்னையும் நடிக்க கூப்பிட்டார்கள். 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்தேன். ஆனால் ஒருநாள் மட்டும்தான் என்னை வைத்து ஷூட் செய்தார்கள். பிறகு கூப்பிடவே இல்லை. நான் தினசரி கூலி வாங்குபவன். இப்படி என்னை ஏமாற்றிவிட்டீர்கள். நான் எங்கு போய் சொல்வது. மேலும் நயனுக்கு குழந்தை பிறக்காது என்று அடித்து கூறினேன். உடனே நயனும், விக்னேஷ் சிவனும் என்னை தொடர்பு கொண்டு அந்த வீடியோவை எடுக்க சொன்னார்கள். நானோ, அது முடியாது, வேறு ஒரு சேனலுக்கு பேசியிருக்கிறேன். அதற்கு உரிமை எனக்கு கிடையாது. வேண்டுமென்றால் உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லுங்கள் என்றேன். அதற்கு பிறகு அவர்கள் பேசவே இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











