Bayilvan Ranganathan - நித்யா மேனனுக்கு ஏன் திருமணம் நடக்கவில்லை.. . பயில்வான் ரங்கநாதன் பேச்சு

சென்னை: Nithya Menen (நித்யா மேனன்) நித்யா மேனனுக்கு ஏன் திருமணம் நடக்கவில்லை என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நித்யா மேனன் ஹனுமன் என்ற இந்திய - ஆங்கில படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1998ஆம் ஆண்டு அறிமுகமான அவர் அதற்கு பிறகு 2006ஆம் ஆண்டு 7 O'Clock என்ற கன்னட படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு 2008ஆம் ஆண்டு ஆகாஷ கோபுரம் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார்.

Bayilvan Ranganathan Talks about Nithya Menen Marriage

வாய்ப்புகள்: கன்னடத்திலும்,மலையாளத்திலும் தான் அறிமுகமான படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தொடர்ந்து அந்த மொழிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி மலையாளத்தில் வெள்ளதூவல், கேரளா கஃபே, ஏஞ்சல் ஜான், அபூர்வ ராகம், அன்வர் என வரிசையாக் நடித்தார். அந்தப் படங்களிலும் அவருக்கு சிறந்த நடிகை என்ற பெயர் கிடைத்தது. மலையாளத்தில் இப்படி பிஸியாக இருந்த அவர் தெலுங்கிலும் அறிமுகமானார்.

தமிழில்: இப்படி கன்னடம், மலையாளம், தெலுங்கு என ரவுண்டு கட்டி நடித்து வந்த நித்யா மேனன் தமிழில் 180 என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனையடுத்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை,ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, இருமுகன், மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

திருச்சிற்றம்பலம்: அவரது தமிழ் கரியரில் ஓ காதல் கண்மணியும், திருச்சிற்றம்பலமும் முக்கியமான படங்களாக அமைந்தன. குறிப்பாக திருச்சிற்றம்பலத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் அதகளம் செய்திருப்பார். குறிப்பாக பாரதிராஜாவுடன் இணைந்து அவர் செய்யும் சேட்டைகளும், தனுஷ் மேல் இருக்கும் காதலை வெளிக்காட்ட முடியாமல் திணறும் இடத்திலும் நித்யா மேனனின் நடிப்பு அப்ளாஸை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் நித்யா மேனனுக்கு திருமணம் நடக்காதது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். அவர் பேசிய வீடியோ ஒன்றில், "35 வயதாகிய நித்யாமேனன் திருமணம் செய்துகொள்ளாததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. கேரளாவில் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அதற்கு காரணம் வரதட்சணை கொடுமை. அந்தக் கொடுமை தனக்கும் நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் நித்யா மேனன் திருமணம் செய்துகொள்ளவில்லை.

உடல் எடை: அதேபோல் கதாநாயகிகள் தங்களை மெலிந்த தேகத்தில் வைத்துக்கொள்ள பல முயற்சிகள் செய்வார்கள். ஆனால் நித்யா மேனனோ இதில் விதிவிலக்கு. அதனால் அவருடைய உடல் எடை அதிகமாக இருக்கிறது. இதனால்கூட திருமணம் தடைபட வாய்ப்பு இருக்கிறது" என்றார். அவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள் யாருக்கு திருமணம் ஆகவில்லை என்றால் உங்களுக்கு என்ன பயில்வான் என கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X