பார்த்திபனை பிரிந்து சென்ற 10 காதலிகள்?.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட பகீர் வீடியோ!
சென்னை: நடிகர் பார்த்திபன் குறித்தும் அவரது காதல் தோல்விகள் குறித்தும் அவரே சமீபத்திய வீடியோ பேட்டியில் பேசியிருக்கிறார் என பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பார்த்திபன் பாக்கியராஜிடம் இருந்து ஏன் பிரிந்து வந்தார் என்றும் அதன் பின்னர் புதிய பாதை படத்தில் எப்படி ஹீரோவாக மாறினார் மட்டும் அவரை காதலிகள் ஏன் பிரிந்து சென்றனர் என பல விஷயங்களை கூறியுள்ளார்.
சினிமா பிரபலங்கள் பற்றிய அந்தரங்க விஷயங்களை தொடர்ந்து யூடியூபில் வீடியோக்களாக வெளியிட்டு பேசி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். அவரது பேச்சுக்கு சினிமா பிரபலங்களே பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் பேசும் கிசுகிசுக்கள் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் அதில், சில உண்மைகள் இருக்கும் என நம்பி ரசிகர்கள் தொடர்ந்து அவரது வீடியோக்களை பார்த்து வருகின்றனர்.

பாக்கியராஜின் 'முந்தானை முடிச்சு' படத்தில் முருங்கைக்காய் மேட்டரையே சொல்லும் வைத்தியராக இவர் தான் நடித்திருப்பார். அப்போதிலிருந்து இப்போது வரை ஏகப்பட்ட மேட்டர்களை சொல்லி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.
பாக்கியராஜுடன் பிரச்சனை: பாக்கியராஜின் உதவி இயக்குநராக இருந்து வந்த பார்த்திபன் ஒருகட்டத்தில் அவருடன் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தான் பிரிந்து வந்து படத்திற்கே 'புதிய பாதை' என டைட்டில் வைத்து படம் எடுத்தார். ஆனால், முதலில் அவருக்கு எந்த ஹீரோவும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. கடைசியாக தயாரிப்பாளர் செலவு அதிகம் ஆவதை அறிந்து பார்த்திபனையே நடிக்க சொல்லி விட்டார். அப்படித்தான் அந்த படத்தில் ஹீரோவாக பார்த்திபன் அறிமுகமானாராம்.
படத்திலும் லைஃப்பிலும் ஹீரோயின்: ஆண் பாவம் படத்தில் அறிமுகமான சீதாவை தனது படத்தில் ஹீரோயினாக மாற்றினார் பார்த்திபன். படத்தில் ஹீரோயினாக நடித்த சீதா பார்த்திபனுக்கு மனைவியாக ரியல் லைஃபிலும் ஹீரோயினாக மாறினார். ஆனால், பார்த்திபனின் காதல் வேட்கை தான் சீதாவை அவரிடம் இருந்து பிரித்து விட்டது என பகீர் கிளப்பியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
10 காதல் தோல்வி: சீதாவை பிரிந்த பின்னரும் அடிக்கடி ஒவ்வொரு பெண்களுடன் காதல் செய்து வருவார் பார்த்திபன். ஆனால், அவர்களை திருமணம் செய்ய முடியாது எனக் கூறிவிடுவார். சில பெண்கள், தங்களுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் என பார்த்திபனை பிரிந்து சென்று விடுவார்கள் என பேசியுள்ளார். இதுபோல 10 பெண்களிடம் பார்த்திபனுக்கு காதல் ஏற்பட்டதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இந்த வயதிலும் பார்த்திபன் காதலித்து வருவதாக சமீபத்திய பேட்டியில் கூறியதாகவும் பயில்வான் ரங்கநாதன் பற்ற வைத்துள்ளார்.
டீன்ஸ் தப்பிக்குமா?: பார்த்திபன் இயக்கியுள்ள டீன்ஸ் திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி வருகிறது. தமிழக அரசு எந்த படத்திற்குமே வரி விலக்கு தருவதில்லை. இந்நிலையில், குழந்தைகளுக்கான படமான டீன்ஸ் படத்திற்கு பார்த்திபனே 100க்கு டிக்கெட் விற்பனை செய்கிறேன் என வரி விலக்கு கொடுத்திருக்கிறார். இதுவரை அந்த படத்தின் கதை கூட வெளியே கசியவில்லை. ஆனால், பார்த்திபன் தனது டீன்ஸ் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருக்கிறார். அந்த படத்தில் வரும் ஒரு சிஜி காட்சி பிரபாஸின் கல்கி படத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் பார்த்திபன் கூறியதை குறிப்பிட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.


Click it and Unblock the Notifications











