Prabhu Daughter - பிரபுவின் மகள் முதல் கணவரை பிரிய இதுதான் காரணமா?.. சீக்ரெட் சொன்ன பயில்வான் ரங்கநாதன்
சென்னை: Prabhu Daughter Marriage (பிரபு மகள் திருமணம்) பிரபுவின் மகள் ஐஸ்வர்யா தனது முதல் கணவரை பிரிவதற்கு இதுதான் காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் ஒரு விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.
திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்ற சூழலில் அடுத்ததாக சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார். பல பிரச்னைகளுக்கு மத்தியில் உருவாகி வெளியான அந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது.

நடிகராக ஆதிக் ரவிச்சந்திரன்: முதல் இரண்டு படங்களுமே தோல்வியடைந்த சூழலில் ஆதிக் ரவிச்சந்திரன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகராக அறிமுகமானார். இயக்குநராக வெல்ல முடியாவிட்டாலும் நடிகராக அறிமுகமான முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமையை திறம்பட காண்பித்தார். சூழல் இப்படி இருக்க அண்மையில் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கினார்.
மெகா ஹிட்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான இரண்டு படங்களும் தோல்வியாக அமைந்ததால் இந்தப் படத்துக்கும் அதே ரிசல்ட்தான் இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் படம் தாறுமாறு ஹிட்டடித்திருக்கிறது. விஷாலின் கரியரிலேயே 100 கோடி ரூபாயை வசூலித்த முதல் படம் என்ற பெயரையும் அது பெற்றது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து படம் இயக்கப்போவதாக கூறப்படுகிறது.
திருமணம்: இந்த சூழலில் அவரும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்துவந்தனர். அவர்களது திருமணம் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இருவரின் திருமணம் நடந்தது. இதில் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்கிடையே ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். ஏற்கனவே தனது உறவினரான குணால் என்பவரை திருமணம் செய்து அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார் ஐஸ்வர்யா.
பயில்வான் வீடியோ: இந்நிலையில் ஐஸ்வர்யா தனது முதல் கணவர் குணாலை பிரிந்ததற்கான காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர், "பிரபுவின் சகோதரி தேன்குழலில் மகனைத்தான் ஐஸ்வர்யா முதலில் திருமணம் செய்துகொண்டார். ஆனால் பிரபுவுக்கும் அவரது சகோதரிக்கும் சொத்து தகராறு ஏற்பட்டது. அதாவது சிவாஜியின் சொத்துக்களை சரியாக மகள்களுக்கும் பிரித்துக்கொடுக்க வேண்டும் ஆனால் பிரபு தனக்கு சொத்தை பிரித்துக்கொடுக்கவில்லை அவரது தங்கை தேன்குழலி வழக்கு தொடர்ந்தார்.
இதன் காரணமாக தேன்குழலியும் பிரபுவும் பேசிக்கொள்வதில்லை. மேலும் தேனின் மகனான குணாலோ, தன்னுடைய தாத்தா சொத்தை மாமா பிரபு ஒழுங்காக பிரிக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தார். மேலும் என்னால் இந்தியாவுக்கு எல்லாம் வர முடியாது என்று சொல்லி வெளிநாட்டிலேயே இருந்துவிட்டார். அதுமட்டுமின்றி என்னுடைய அம்மா என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்வேன் என்று சொல்லிவிட்டார். நிலைமை முற்றிப்போனதை அடுத்து இரண்டு பேரும் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்றுவிட்டனர். பிறகு ஆதிக்குடன் எப்படியோ பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications