அடேங்கப்பா இத்தனை சவரனா?.. பிரேம்ஜி மனைவிக்கு சீதனமாக வந்த தங்க நகைகள்.. பயில்வான் ரங்கநாதன் பேச்சு!
சென்னை: காமெடி நடிகர் பிரேம்ஜி வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இந்து என்கிற பெண்ணை கடந்த ஜூன் 9ம் தேதி திருத்தணியில் திருமணம் செய்துக் கொண்டார். எளிமையான முறையில் திருமணத்தை நடத்தப் போகிறோம் என வெங்கட் பிரபு அறிவித்தாலும், திருமணத்துக்கு முந்தைய இரவில் பல்வேறு முன்னணி நடிகர்கள் பங்கேற்ற திருமண நிச்சயதார்த்தம் திருத்தணி அருகே உள்ள மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
அந்த போட்டோக்களை பார்த்த பலரும் பிரேம்ஜியின் திருமணத்தை பார்த்தாக வேண்டும் என திருத்தணிக்கு படையெடுத்து விட்டனர். இளையராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் ஏன் வரவில்லை என்கிற கேள்வியை ரசிகர்கள் ஒரு பக்கம் முன் வைக்க, இந்து முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் பிரேம்ஜி பூணூல் அணிந்தார் என்றும் திருமணத்திற்கு மணமகளுக்கு மிகப்பெரிய சீதனத்தை குடும்பத்தார் வழங்கியதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசியே சோஷியல் மீடியாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை பயில்வான் ரங்கநாதன் சேகரித்து வைத்துள்ளார். சிலர் அவர் கருத்தை ஆதரித்தும் பலர் அவர் சொல்வது அனைத்துமே உருட்டு என்றும் சிலர் அவருடன் சண்டை போட்டும் வருகின்றனர்.
பிரேம்ஜி திருமணம்: 45 வயதான பிரேம்ஜி தன்னை விட 15 வருடம் சிறியவரான இந்துவை திருமணம் செய்துக் கொண்டார் என பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். வங்கியில் வேலை பார்த்து வந்த இந்து பிராமணப் பெண் என்றும் பிராமண முறைப்படி அவர்கள் திருமணம் நடைபெற்றது என்றும் அப்பா கங்கை அமரன் ஒதுங்கி இருக்க வெங்கட் பிரபு அப்பா ஸ்தானத்தில் திருமணத்தை நடத்தினார் என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

1000 சவரன் நகை: பிரேம்ஜியை துரத்தி துரத்தி காதலித்து இந்து தான் புரபோஸ் செய்து திருமணம் செய்துக் கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜியை திருமணம் செய்து கொண்ட இந்துவுக்கு அவரது பெற்றோர் 1000 சவரன் நகைகளை சீர் வரிசையாக வழங்கி உள்ளதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இதெல்லாம் உண்மையா? அல்லது உருட்டா? என நெட்டிசன்கள் அவரது வீடியோவுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ரிசப்ஷன் எப்போ?: ஐஸ்வர்யா அர்ஜுன் மகள் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில், ஜூன் 14ம் தேதி லீலா பேலஸில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதே போல சென்னையில் பிரேம்ஜியின் ரிசப்ஷன் எப்போ? என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர். நிச்சயம் கூடிய சீக்கிரமே பெரியளவில் திருமண வரவேற்பு விழாவை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











