Priyanka Mohan - வெளிநாட்டில் ஜாலி பயணம்..காருக்குள் நடிகை செய்த செயல் - பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்

சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) நடிகை ப்ரியங்கா மோகன் குறித்தும் ஓவியா குறித்தும் பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப்புள்ளியாகவும் இருப்பார்.

Bayilvan Ranganathan Talks about Priyanka Mohan And Oviya

அவதூறு பரப்பும் பயில்வான்: தான் சொல்வதுதான் உண்மை. தனக்கு சினிமாவில் இருப்பவர்கள் பற்றி எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையில் இருப்பவர் நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர் உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால் அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களின் கருத்து. மேலும் அவர் அப்படி பேசுவதை பிரபலங்கள் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

சண்டை செய்த ரேகா நாயர்: இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் தான்தோன்றித்தனமாக பேசிவைக்க; திருவான்மியூர் கடற்கரையில் அவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது ரேகா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ரேகா நாயர். அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் எனவும் பகிரங்கமாக பேட்டியும் அளித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ராதிகா குறித்து அவதூறாக பேசியதால் பயில்வானை ராதிகா செருப்பால் அடித்தார் என்றும் ஒரு தகவல் உலாவுகிறது.

புதிய வீடியோ: இந்நிலையில் அவர் நடிகைகள் ப்ரியங்கா மோகன் மற்றும் ஓவியா குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "ஜெயிலர் இயக்குநருடன் ப்ரியங்கா மோகன் ஜாலியாக வெளிநாட்டில் சுற்றுகிறார். அவர் நெல்சன் இயக்கத்தில் அறிமுகமானவர். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர். அதனையடுத்து டான் எதற்கும் துணிந்தவன் படங்களில் நடித்தார்.

Bayilvan Ranganathan Talks about Priyanka Mohan And Oviya

நெருங்கிய நட்பு: நெல்சன் திலீப்குமாருக்கும் ப்ரியங்காவுக்கும் நெருங்கிய நட்பு உண்டு. நெல்சன் எப்போதெல்லாம் வெளிநாடு செல்கிறாரோ அப்போதெல்லாம் ப்ரியங்கா மோகனும் செல்கிறார். இப்போது நெல்சன் குடும்பத்தோடு சென்றிருக்கிறார். அவரது குடும்பத்தில் ஒருவராக ப்ரியங்கா மோகனும் சென்றிருக்கிறார்.

ஓவியா: அதேபோல் ஓவியா போதையில் ஊர் சுற்றுகிறார் என்று சொன்னோம். அதற்கு ஓவியா என்ன சொன்னார் தெரியுமா நான் நிறைய குடிக்க மாட்டேன் கொஞ்சம்தான் குடிப்பேன் என்றார். மேலும் பாலியல் கல்வி வேண்டுமா வேண்டாமா என்று கேட்டால் அதை கற்று தெளிய முடியாது. பிராக்டிக்கலாக்கவும் வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னதைத்தான் சொல்கிறேன். சமீபத்தில்கூட காருக்குள் பேண்ட்ஜிப்பை கழற்றிக்கொண்டு ஒரு போஸ்ட் கொடுத்திருக்கிறார். மாலத்தீவுக்கு சென்றும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X