Bayilvan Ranganathan: கணவரை பிரிந்து வாழ்கிறாரா ரம்யா கிருஷ்ணன்?.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன விஷயம்!
சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறாரா என்கிற கேள்விக்கு அவரே அளித்த நச் பதில் இதுதான் என புதிய வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. சினிமாவில் ரியல் லேடி சூப்பர் ஸ்டாராக பல கெட்டப்புகளை போட்டு தனது நடிப்பால் திணற விட்டவர் ரம்யா கிருஷ்ணன்.
சினிமாவில் பல நடிகைகள் பற்றி கிசுகிசுக்கள் வரும் நிலையில், எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்காத நடிகையாக இத்தனை வருடங்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் ரம்யா கிருஷ்ணன் என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

ரஜினியையே தூக்கி சாப்பிட்ட நீலாம்பரி: தமிழ் சினிமாவில் இதுவரை எந்தவொரு நடிகையும் ரஜினிகாந்த் நடிப்பை ஓவர்டேக் செய்து இப்படியொரு நடிப்பை வெளிப்படுத்தியது இல்லை என்றும் மன்னன் படத்தில் கூட விஜயசாந்தி ரஜினிக்கு நிகராக நடித்திருப்பார். ஆனால், ரஜினிகாந்தையே தூக்கி சாப்பிட்டவர் படையப்பா படத்தில் நீலம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் தான் என பலர் பாராட்டிய நிலையில், அந்த கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
தம்பி மனைவி, வில்லி, மனைவி: ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன் படத்தில் தம்பி மனைவியாக நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். அதன் பின்னர் படையப்பா படத்தில் மாமா பொண்ணாகவும் வில்லியாகவும் நடித்து மிரட்டினார். ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவியாகவும் நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன்.
மனைவி, மகள், தங்கை: அதே போல நாசருக்கு மனைவியாக பாகுபலி படத்தில் நடித்திருப்பார். மகளாக வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்திருப்பார். தங்கையாக படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார் என பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
இந்த வயதிலும் கவர்ச்சி நடிப்பு: சிம்பு நடித்த குத்து படத்தில் “போட்டுத்தாக்கு” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரம்யா கிருஷ்ணன் விஜயகாந்தின் நரசிம்மா, கமல்ஹாசனின் பஞ்ச தந்திரம் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியாக நடித்திருப்பார். ஒரு பக்கம் அம்மன், அம்மா, ராஜாமாதா என கெளரவமாக நடித்தாலும், இன்னொரு பக்கம் சூப்பர் டீலக்ஸ், பார்ட்டி என இந்த வயதிலும் அப்படி கவர்ச்சியாக நடிக்க ரம்யா கிருஷ்ணனால் மட்டுமே முடியும் எனக் கூறியுள்ளார்.
திருமண உறவு முறிவா?: ஒரு சமயம் பத்திரிகையாளர் ஒருவர் உங்க கணவருடன் சேர்ந்து வாழவில்லையா? என்றும் விவாகரத்து ஆகி விட்டதா? என கேட்க கடுப்பான ரம்யா கிருஷ்ணன் நான் என் கணவருடன் தான் வாழ்ந்து வருகிறேன். இருவரும் சினிமாவில் பிசியாக இருக்கிறோம். அவர் டோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். நான் தமிழ் மற்றும் தெலுங்கில் சினிமா, சீரியல் என நடித்து வருகிறேன் என படாரென பதில் அளித்து அந்த நபரின் வாயையே அடைத்து விட்டார் என்றும் பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ரம்யா கிருஷ்ணன் குடும்பம்: 2003ம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ரம்யா கிருஷ்ணன். ரித்விக் வம்சி எனும் ஒரு மகனும் உள்ளார். குலாபி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான கிருஷ்ண வம்சி பிரபாஸை வைத்து சக்கரம், ஜூனியர் என்டிஆர் நடித்த ராக்கி உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். கடந்த ஆண்டு ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ரங்கமார்த்தாண்டா படத்தையும் கிருஷ்ண வம்சி தான் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











