ரம்யா பாண்டியன் & தவான் திருமணம்.. அம்மாவுக்கு கூட சொல்லல.. பயில்வான் சொன்ன ஷாக் தகவல்!
சென்னை: டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் நேற்று தனது காதல் லோவல் தவானை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரம்யா பாண்டியன் கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் தனது காதலரை அறிமுகம் செய்திருந்தார். இதையடுத்து இவர்களின் திருமணம் ரிஷிகேஷ், சிவ்புரி கங்கைக்கரையில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ரம்யா பாண்டியன் காதல் திருமணம் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், அருண்பாண்டியனின் தம்பி துரைபாண்டியனின் மகள் தான் ரம்யா பாண்டியன். துரைப்பாண்டி இறந்துவிட்டதால், அருண்பாண்டியனுக்கும் அந்த குடும்பத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் இருந்தது. ரம்யா பாண்டியனுக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. ரம்யாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் சினிமாவில் நடிக்க வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், அவரால் சினிமாவிலும், சின்னத்திரையிலும் சரியான அடித்தளத்தை அமைக்க முடியாததால் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்து திருமணம் செய்து கொண்டார்.

ரம்யா எடுத்த முடிவு: யோகாவில் ஈடுபாடு கொண்ட ரம்யா பாண்டியன் பெங்களுரில் இருக்கும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்றார். அப்போது தான் ரம்யாவிற்கு லோவல் தவானுடன் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியதை அடுத்து இருவரும் லிவ்விங்டூ ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். தற்போது இருவரும் நேற்று ரிஷிகேஷில் திருமணம் செய்து கொண்டார்கள். ரம்யா பாண்டியன் எப்படி தன்னிச்சையாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து வந்தாரோ அதேப்போல, திருமண முடிவையும் யாரிடமும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளார். தனது அம்மா மற்றும் சகோதரரிடம் திருமணம் செய்ய இருப்பதாக ஒரு தகவலைத்தான் சொல்லி இருக்கிறார் ரம்யா பாண்டியன். இதனால், யாராலும் எதுவும் சொல்ல முடியவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்
சென்னையில் ரிசப்ஷன்: ரம்யா பாண்டியன் மற்றும் லோவல் தவானின் திருமணம் ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் நடைபெற்றதால்,நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால், சினிமா பிரபலங்கள் நண்பர்கள் கலந்து கொள்ளும் வகையில் சென்னையில் வரும் 15ந் தேதி ரிசப்ஷன் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











