குடும்பத்திலிருந்து சமந்தாவை மாதிரி ராஷ்மிகாவையும் துரத்திடுவாங்க.. ஓவராக பேசிய பிரபலம்
சென்னை: ராஷ்மிகா மந்தனா இப்போது இந்திய அளவில் ஃபேமஸான ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்திய அளவில் அவருக்கு நேஷனல் க்ரஷ் என்ற பெயர் இருக்கிறது. கடைசியாக அவரது நடிப்பில் புஷ்பா 2 வெளியானது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் தமிழிலும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார் அவர். விஜய் தேவரகொண்டாவை காதலித்து வரும் ராஷ்மிகா பற்றி பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஓவராக பேசியிருக்கிறார்.
கன்னட படத்தில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பிறகு தெலுங்கில் அவருக்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து அங்கே முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். அவரது எக்ஸ்பிரஷன்கள், நடிப்பு, நடனம், கவர்ச்சி என அனைத்தையும் தெலுங்கு ரசிகர்கள் ரசித்தார்கள். இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே டாப் நடிகையாக வலம் வர ஆரம்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் நடித்த அவர் தமிழில் சுல்தான் படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் அவருக்கு கைகொடுக்கவில்லை.

தமிழில் போராட்டம்: அதேசமயம் எப்படியாவது தமிழில் தனக்கென மார்க்கெட்டை உருவாக்கிவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த அவருக்கு விஜய்யுடன் வாரிசு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது. தற்போது அவர் தனுஷுடன் குபேரா படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படமாவது தமிழில் தனக்கு நிலையான இடத்தை பிடித்து தருமா என்கிற உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அவரது ரசிகர்களும் அதே எதிர்பார்ப்பில்தான் இருக்கிறார்கள்.

புஷ்பா 2: கடைசியாக அவரது நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்திருக்கிறது. அந்தப் படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியை காண்பித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இதற்கிடையே அவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்துவருகிறார். இருவரும் ஒரே வீட்டில்தான் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் புஷ்பா 2 படத்தையும் விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்துடன் சென்று ராஷ்மிகா பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பயில்வான் பேட்டி: இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலில் அத்துமீறி பேசியிருக்கிறார். அவர் அளித்திருக்கும் பேட்டியில், “புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுடன் ரொம்பவே நெருக்கமாக நடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இதில் வரும் காட்சிகள் எல்லாம் ஒரு எக்ஸ் இல்லை ட்ரிபிள் எக்ஸ் பட காட்சிகளை போன்றுதான் இருக்கிறது. இந்தப் படத்தை விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்துடன் வேறு சென்று பார்த்திருக்கிறார் அவர்.
துரத்தி விடுவார்கள்: அவரிடமிருந்து எடுப்பதற்கு இனி எதுவுமே இல்லை. அல்லு அர்ஜுன் ரொம்பவே ராஷ்மிகாவிடம் விளையாடிவிட்டார். இனிமேல் அவர் மீது கை வைத்தால் எச்சில் இலைதான். ராஷ்மிகா மந்தனா இனி சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தால் மட்டுமே அவருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் திருமணம் நடக்கும். இப்படியே நடித்துக்கொண்டிருந்தால் சமந்தாவை எப்படி நாக சைதன்யா குடும்பத்தினர் துரத்திவிட்டார்களோ அதேபோல் இவரையும் விஜய் குடும்பத்தினர் துரத்திவிடுவார்கள்" என்று ஓவராக பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











