ஆர்த்தி எவ்வளவு ஜீவனாம்சம் கேட்பார்? என்ன பயில்வான் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: சோஷியல் மீடியாவில் பெரும் புயலை கிளிப்பி உள்ளது ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து விவகாரம். ஜெயம் ரவி, தன் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையான முடிவு செய்ததாக ஆர்த்தி கூறியிருக்கும் நிலையில், இந்த பிரச்சனை இன்னும் பேசுபொருளாகி உள்ளது. இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜெயம் ரவி, ஆர்த்தி ஜோடி. இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கையை மறந்துவிட்டு, தனது குழந்தைகளைப் பற்றிக்கூட நினைக்காமல் விவாகரத்து கோரி இருப்பது. அவரது ரசிகர்களை மட்டுமல்லாது, சாதாரண மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இவர்களின் இந்த முடிவுக்கு காரணம், ஆர்த்தி செய்த டார்ச்சர் என்றும், அவருக்கு ஜெயம் ரவி மீது சந்தேகம் என்றும் சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல் மாமியார் சுஜாதா தான் இவர்கள் பிரிவுக்கு காரணம் என பல விஷயம் இணையத்தில் பரவி வருகிறது.

அம்மாவிடம் பேசினேன்: இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், நான் ஆர்த்தியின் அம்மாவிடம் பேசினேன். அவர், என் மகளுக்கும் ஜெயம் ரவிக்கும் அடிக்கடி சண்டை வரும், ஆனால், அவர்களே சமாதானம் ஆகி விடுவார்கள். ஆனால், இந்த முறை என்ன சண்டை என்று எனக்குத் தெரியவில்லை. நான் கடந்த சில மாதமாகவே ஜெயம் ரவியிடம் பேச முயற்சி செய்தேன். அவர் மும்பைக்கு தனியாக சென்றுவிட்டார். இதனால், அவரிடம் என்னால் பேச முடியவில்லை என்று சொன்னார்கள்.
உணர்ச்சிவசப்பட்ட முடிவு: ஜெயம் ரவியே, வெளியிட்ட அறிக்கையில் நான் யார் மனதையும் புண்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறார். அப்படி இருக்கும் போது, மனைவி ஆர்த்தியிடம் என்ன பிரச்சனை என்று அழைத்து பேசி இருக்கலாம். அல்லது விவாகரத்து குறித்து பேசி இருக்கலாம். ஆனால் யாரிடமும் கலந்து பேசாமல் இவராக தனிச்சையாக ஒரு முடிவு எடுத்து இருக்கிறார். ஏதோ ஒரு கோபத்தில் தான் ஆர்த்தி இன்ஸ்டாகிராமிலிருந்து போட்டோக்களை டெலிட் செய்திருக்கிறார். இதனால, இருவருமே உணர்ச்சி வசப்பட்டு இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார்கள்.
மீண்டும் சேர்வார்கள்: இதைத்தொடர்ந்து செய்தியாளர், ஆர்த்தி எவ்வளவு ஜீவனாம்சம் கேட்பார் என்று கேள்வி கேட்டார். இதை கேட்டு ஷாக்கான பயில்வான், இந்த கேள்வி இப்போதைக்கு வேண்டாம். கணவன் மனைவி பிரிந்து போக வேண்டும் என்று நான் எப்போதும் நினைக்க மாட்டேன். மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும், ஆனால் நான் லைக்குக்காக இப்படி பேசமாட்டேன். ஏன் என்றால் எனக்கும் குடும்பம் மகன், மகள் இருக்கிறார்கள். ஜீவனாம்சம் கேட்கும் அளவிக்கு இதுபோகாது. விவாகரத்து கேட்டு, ஜெயம் ரவி மனு அனுப்பி இருக்கிறார், அவ்வளவுதான்.
குழந்தைகளுக்காக: ஏன் என்றால், விவாகரத்தில் இரண்டு பேருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். ஆனால், ஆர்த்திக்கு இதில் விருப்பம் இல்லை என்பதால், இது அவ்வளவு தூரம் போகாது. அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆர்த்தியின் அம்மா, ஜெயம் ரவியின் பெற்றோரிடம் பேசி மீண்டும் இருவரையும் சேர்ந்து வாழ வைப்பார்கள். ஜெயம் ரவி வீட்டில், ஜெயம் ரவிக்கு ஆதரவு இருந்தாலும் கூட பேரன்களுக்காகவாவது இவர்கள் விட்டு கொடுத்து போகவேண்டும் என ஜெயம் ரவியை சமாதானப்படுத்துவார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











